(234) ||-
அப்பாத்துரையம் - 3
அறம், பொருள், இன்பம் என்னும் இம் முக்கூறுகளும் ஒருங்கே இணைந்த முழுப்படமே மனித இனநாகரிகம் என்னும்
வீடு.
ஓருலகம் ஓருலக வாழ்வு ஓருலக இன்பம் பற்றி இன்றைய உலகப் பெரியார்கள் பேசுகின்றனர்; எழுதுகின்றனர்;
திட்டமிடுகின்றனர்.
உலக நீதிமன்றம்; ஜெனிவா உலகநாடுகள் சங்கம், ஐக்கிய நாடுகள் அமைப்பு ஆகியவை இவ்வடிப்படையில் எழுந்துள்ளன.
படம் பல, திரை பல கலைஞர் பலர் என்று செப்பும் உலகத்திலே, வள்ளுவர் வழிவந்த இந்த ஒருவகைப் பண்பு அழகுக் கனவாகத்தான் இன்னும் நிலவ முடிகிறது. பல ஆயிர ஆண்டுகளுக்கு முன் கனவைத் திட்டமிட்டு உலகெலாம் பரப்பிய முப்பால் வேத முதல்வனை அறியாமல் அக் கனவு முழு நிறைவு பெறமுடியுமா?
ஐக்கிய நாடுகள் அவையும் அதனை அறியட்டும், மேலோரும் அறிய வள்ளுவமும் அது கூறும் முப்பாலும் உலகறியத் தமிழர் பரப்புவாரா?
அக் காலம் வரும். விரைந்து வரும் என்று நம்பலாம்.
அக் காலம் விரைந்துவரத் தமிழர் முயல்வாராக!.