மொழி வளம்
1237
பொழுது போக்கிலக்கியத்தை மக்கள் இலக்கியமாகவும்; மாயக் கற்பனைக்கவிதை, இலக்கியத்தை உணர்ச்சிக் கவிதை, உரை நடை அறிவிலக்கியம் உட்பட்ட முழுநிறை இலக்கியமாகவும் மாற்றியுள்ளது.
மேலே குறிப்பிட்ட எல்லா மாறுதல்களும் உலகில் எங்கும் எல்லா மொழிகளிலும் ஏற்பட்டு வளர்ந்தே வருகின்றன. ஆயினும், இவ்வெல்லா மாறுதல்களும் எல்லா மொழிகளிலும் ஒரேபடியாக ஒரே காலத்தில் அல்லது ஒரே முறைமையில் ஏற்பட்டுவிட்டன அல்லது ஏற்பட்டு வந்துள்ளன என்று கூற முடியாது. நம் தமிழ் மொழியைப் பொறுத்தவரை ஒரு சில துறைகளில் இம் மாறுதல்கள் மேலை மொழிகளையும் கீழை மொழிகளையும் தாண்டி நெடுந்தொலை முன்னேற்றம் கண்டுள்ளன. ஒரு சில துறைகளில் மொழிகளுடன் மொழியாக முன்னேற்றம் தடைபட்டுக் காலந்தாழ்ந்தே நிறைவேற வேண்டியுள்ளதாகின்றது.
செய்தியிதழ்கள் தனிப்படத் தமிழ் மொழிக்குச் செய்துள்ள நலன்களைக் குறிக்கும்போது நாம் செய்தியிதழ் ஊ ஊழிக்கு முன்பிருந்தே அஃது அடைந்துள்ள முன்னேற்றத்தைக் குறிக்காமலிருக்க முடியாது. அவ்வூழிகளில் உலகில் தாய் மொழிகளுக்கிருந்த பொதுப் பிற்போக்கு நிலைக்கு விதி விலக்கானவை என்று குறிப்பிடத்தக்க மொழிகளில் அஃது ஒன்று, மிக மிக முக்கியமான ஒன்று என்பதை நாம் மறந்து விடக்கூடாது.அவ் விதிவிலக்குகளுள் மிகப் பழைமை வாய்ந்தவை ஐயாயிர ஆண்டுகட்கு முன் தழைத்திருந்த சால்டிய எகிப்திய மொழிகள். இவை அறிவியல் கலைகளில் அந்நாளைய உலக சராசரி தாண்டி நெடுந்தொலை முன்னேறியிருந்தன. ஆனால், மொழியிலும் மொழிசார்ந்த கலையாகிய இலக்கியத்திலும் அவை பிற்போக்கேயுற்றிருந்தன. இரண்டாயிர ஆண்டுகட்கு முற்பட்ட சமற்கிருதம் இலத்தீனம் ஆகியவை அறிவியலிலும் கலையிலும் இலக்கியத்திலும் ஒருங்கே முன்னேறியிருந்தன. ஆனால், அவை மக்கள் இலக்கியமாக தற்சிந்தனை இலக்கிய மாகத் தழைக்கவில்லை. காலத்தால் இவ்விருவகைகளையும் அளாவியிருந்த தமிழ், கிரேக்கம், சீனம் ஆகிய மூன்று