18. ஆங்கிலமா? இந்தியா? தமிழா?
இந்தியத் துணைக் கண்டத்தில் இன்று மக்கள் மொழி களாய் இயங்கும் மொழிகள் மிகப்பல. மக்கள் சார்பில் பார்த்தால் இவை யாவுமே தேசிய மொழிகள்தாம். ஆனாலும், குறைந்த அளவில் ஒரு கோடி மக்களால் பேசப்பட்டு, ஒரே பெயரும், உருவும், எல்லையும் ஒருமைப்பாடும் உள்ள மொழிகள்தாம் தேசிய மொழிகள் என்ற கருத்தின்படி, தமிழ் உட்பட 14 மொழிகள் இந்திய அரசியலாரால் மாநிலத் தேசிய மொழிகளாக ஏற்கப்பட்டுள்ளன.
விடுதலை பெற்ற தேசத்தில், தன்னாட்சி அல்லது மக்களாட்சி முறைப்படி மக்கள் மொழி அல்லது மொழிகள்தாம் ஆட்சி மொழி, அல்லது மொழிகள் ஆதல்வேண்டும். மேலை யுலகில் சோவியத் ஒன்றியம் போன்ற பெரும் பரப்புகளிலும் சரி, ஸ்விட்சர்லாந்து போன்ற சிறிய அமைப்புகளிலும் சரி, மக்கள் பேசும் பன்மொழிகளில் எத்தகைய சிறுமை, பெருமை வேறு பாடும் இல்லாமல் எல்லா மொழிகளுமே மய்யத்தில் ஆட்சி மொழிகளாக ஏற்கப்பட்டுள்ளன. இந்திய மாநிலத்திலோ பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் ஆட்சியாளர் மொழி வேறு, மக்கள் மொழி வேறு என்ற அடிப்படையிலேயே ஆங்கிலம் ஆட்சி மொழியாக இருந்தது.
விடுதலை ஆட்சி ஏற்பட்டபோது தன்னாட்சி யடிப் படையில் ஆட்சி மொழி படிப்படியாக ஆங்கிலத்தினிட மிருந்து மக்கள் மொழிகளுக்கே மாறியிருத்தல் வேண்டும். ஆனால், விடுதலைப் போராட்டக் காலத்திலேயே ஆட்சி மொழிக்குப் பதில் தேசிய மொழி என்பது 'ஒரு தேசிய மொழி' என்று எப்படியோ அரசியல் ஆய்வறிவற்ற மக்களால் கருதப் பட்டுவிட்டது. அத்துடன் எப்படியோ பிரான்சு முதலிய நாடுகளைப் போன்ற மொழி நாடுகளை அரசியல்வாதிகள்