பக்கம்:அப்பாத்துரையம் 3.pdf/280

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மொழி வளம்

259

கொண்டு' புற உலகினுள் ஒரு தொடர்வண்டிக் குட்டியுலகமாக உந்தியும் முந்தியும் பிந்தியும் உருண்டோடுகின்றது.

புறப் புகழ்ப்படி, இன்பப்படி என்ற இந்த இரண்டு படிகளுக்குள்ளும் தான் இன்றைய தமிழ் இனமும், பிற மனித இனங்களும் நின்றியங்குகின்றன. ஆனால் முதற்படி, இடைப்படி ஆகிய இவ்விரண்டும் கடந்த மூன்றாம் பெரும் படி ஒன்று உண்டு. அது மனித இனத்துக்கெல்லாம். உலகுக்கெல்லாம் உரிய படிதான்; உலகப் பெரியார், கவிஞர், கலைஞர், அருளாளர் பலரும் 'தூரந் தொலைவிலிருந்து திசை சுட்டிக் காட்டிய, படிதான்! ஆயினும், இன்று கூட முழு அளவில் தமிழனே கண்ட படி இது என்று கூறலாம்.

உலகுக் கேற்றபடி நம்மை ஆக்கிக்கொள்ள முயல்வதற்கு மாறாக, இந்தப் படியில் நாம் நமக்கேற்றபடி உலகை ஆக்கிவிட விரும்புகிறோம்; துணிகிறோம். எழுகிறோம்.

இளமையை விரும்பாதவரில்லை. இளமையின் ‘அழகும் முறுக்கும் துடிப்பும்' கவிஞர்களின் ஆர்வத்தைக் கிளறுகின்றன. ஆனால், முதுமையைப் பாடியவர், ஆய்ந்து பாராட்டியவர் இலர் என்றே சொல்லலாம். எனினும்,

இளமை கவின் மலர்:

முதுமை அதன் இன்கனி'

என்றார் ஆங்கிலக் கவிஞர் பிரௌனிங். ஆனால், உலகக் கவிஞருள் ஒரு கவிஞரே தூரக் கற்பனையாகக் கண்ட இந்த உண்மையின் முழு உருவம் தமிழ்ப் பண்பின் அடிப்படையாக, வள்ளுவத்தின் தனிச் சிறப்புச் சின்னமாக அமைந்துள்ளது. இன்பம்-இனம் என்ற சொற்களின் தொடர்பு (ஆங்கிலத்தில் பிளஸ்-வாழ்த்து, பிளஸ்-இன்பம் என்ற தொடர்பு ஒப்பு நோக்கத்தக்கது) இதைச் சுட்டிக் காட்டுகிறது. இன்னும் தெளிவாக, கிழப் பருவம் முதுமைப் பருவம் என்ற சொற்களே இதை விளக்கவல்லன. பண்பில் இழிந்துவிட்ட இன்றைய தமிழன் பிற இனத்தவரைப் போலக் 'கிழவன்; 'முதியவன்’ என்று ஒருவரை ஏளனம் செய்யலாம். ஆனால், உண்மையில் இவ்வாறு ஏளனமாகக் கூறுவதற்கு மற்ற மொழிகளில்