அப்பாத்துரையம் - 3
270 ||- மலர்ச்சிகண்டமொழிகள் பல. சமற்கிருதம், கிரேக்கம். இலத்தீனம் முதலிய மொழிகள் ஒரே ஒரு பெருமலர்ச்சி கண்டு பின் தங்கி மடிவுற்றன. ஆங்கிலம், சீனம், தமிழ் முதலிய மொழிகள் பல மலர்ச்சிகள், மறுமலர்ச்சிகள், புதுமலர்ச்சிகள் கண்டுள்ளன; கண்டு வருகின்றன. தமிழில் சங்க இலக்கிய ஊழி, பத்தி ஊழி, கம்பர் காலமாகிய இதிகாசக் காலம், வள்ளலார் காலம், நம் காலம் என மலர்ச்சிகள் பல. தற்கால மலர்ச்சி, இயல்பான மலர்ச்சி; அதில் புது மலர்ச்சியும் ஒருங்கே இணைந்துள்ளன. அது பண்டைத் தமிழின் இயல் மலர்ச்சியாலும் உலகளாவிய கண்ணோட்டத்தாலும் சூழ்ந்துள்ள நாடுகளின் கலை, எதிர்கனா விளைவுகளாலும் நிகழும் மறுமலர்ச்சியாக விளங்குகின்றது. அதே நேரத்தில் தமிழர் புது விடுதலைத் தேசியத் தூண்டுதலால் ஏற்படும் புது மலர்ச்சியாகவும் இயங்குகின்றது.
ய
எழுத்தாளர் உருவாக்கும் இன்றைய இலக்கியம் பண்டை இலக்கியங்களைவிட எல்லையிலும் தேசிய ஆழ விரிவுகளிலும் எவ்வளவோ அகற்சியுடையது. ஏனெனில், அதில் கவிதை மட்டுமின்றி அதனினும் விரிவாக உரை நடை இலக்கியத் துறைகள் இடம் பெறுகின்றன. புதிய துறைகளான புதினம், சிறுகதை, கட்டுரை, நாடகம், ஓரங்க நாடகம் ஆகியவை கவிதைக் காலம் காணாத புதிய உரைநடையே கண்ட வளங்கள் ஆகும். பத்திரிகைத் தமிழ், பாடத் தமிழ், விஞ்ஞானத் தமிழ் ஆகியவை பண்டை முத்தமிழ் வகுப்பு முறை வகுத்துக் காணாத புது முத்தமிழ் வகுப்புகள் ஆகும். உலகளாவிய இப்புது வளத்திலும் தமிழ் பிந்திடவில்லை. ஆனால், பிந்திவிடாமலிருக்க இன்றைய நிலையில் நம் ஓயா விழிப்பும் உழைப்பும் தேவை. ஏனெனில், இன்றைய உலகம் விரைந்து ஒருவரை முந்தி ஒருவர், ஒரு மொழியுடன் போட்டியிட்டு ஒரு மொழி முன்னேறிச் செல்லும் உலகம் ஆகும். தனி வாழ்வு என்பது என்றுமே தயக்கமும் தளர்ச்சியும் தருவது. இன்றோ அது எண்ணக்கூடாத ஒன்று. அதே சமயம் தன் பண்பு, முயற்சியின்றி உலகப் பண்புகளில் மிதக்கும் தனி மனிதனும் சரி, மொழியும் சரி-உலகில் இனி தனக்குரிய இடம் பெறாது. மேல் திசை மொழிகளைப் பார்த்துப் பின்பற்றிக் கீழ்த்திசை மொழிகளாகவும் பண்டை மொழிகளைப் பார்த்துப் பின்பற்றி ன்றைய மொழிகளாகவும், இயங்குவ தென்பது பின்னேற்ற