16
அப்பாத்துரையம் - 3
நமக்கும் அந்த 'ஓர் உலகத்'துக்கும் இடை டையேயுள்ள தொடர்பு சரிசமத் தொடர்பு அல்லது தோழமைத் தொடர்பும் அல்ல. சிறிது ஏற்றத் தாழ்வுடைய தொடர்பு அல்லது போட்டித் தொடர்பும் அல்ல. அது பெரிதும் ஆண்டவன் பக்தன், ஆண்டான் - அடிமை, அரசன் - ஆண்டி, முதலாளி - தொழிலாளி ஆகிய தொடர்புகளுடன் ஒத்தது.
பத்திரிகைச் செய்திகளின் இரண்டாவது கூறு தேசச் செய்திகள்.
இங்கே தேதி வரியில் நாம் டில்லி, பம்பாய், கல்கத்தா, அலாகாபாத் போன்ற நகர்ப் பெயர்களையே பெரும்பாலும் காண்போம்.சென்னை சில சமயம் அவற்றிடையே தலைகாட்டும். ஆனால் மதுரை, திருச்சிராப்பள்ளி,கோயமுத்தூர், திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி தலை காட்டமாட்டா. அவை இந்த இரண்டாம் படியில்கூட எளிதில் காணமுடியாத இடங்கள். உண்மையில் மூன்றாம் பகுதியான சில்லறைச் செய்திகளில்கூடச் சென்னை மிகுதியாகவும், இந்நகரங்கள் அருகலாகவுமே இடம் பெறும்.
செய்திகளும் ‘தேசச் செய்தி' என்ற முக்கியத்துவம் பெறும்போது அவ்வாறு உயர்வுபெறும் அளவுக்கு நம்மைவிட்டு அகலச்செல்லும். அகலச் செல்லும் அளவிலேயே அவற்றின் 'தேசியம்’ வளர்வதாகக் கொள்ளப்பெறும்.
தமிழ்ப் பத்திரிகைகளும் தமிழரும்
தமிழகப் பத்திரிகைகள் அதாவது தமிழகத்தில் தமிழ்த் தொடர்புற்றவர்களால், தமிழ்த் தொடர்பற்ற அல்லது தமிழ்த் தொடர்பு மிகுதியில்லாதவர்களுக்காக வெளியிடப்படும் பத்திரிகைகள் சார்ந்த செய்தி இது. இவையல்லாமல், தமிழ் மொழியிலேகூட இதே நிலைப்பட்ட பல பத்திரிகைகள் உண்டு. ஆனால் சில பத்திரிகைகளில்- அதுவும் சென்ற சில ஆண்டுகளில் வெளிவந்த பத்திரிகைகளில் மட்டும் - 'தமிழகச் செய்திகள்' என்ற ஒரு தலைப்பைக் காண்போம். இது மூன்றாம் பகுதி சார்ந்ததேயானாலும், அந்தப் பகுதியிலேயே சற்று முனைப்பான இத்தகைய தலைப்புக்குரிய அவசியத்தை இப்பத்திரிகைகள் உணர்ந்து கொண்டு விட்டன என்னலாம்!