பக்கம்:அப்பாத்துரையம் 31.pdf/103

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




12. கூணாசூந்திக் கிராமத்திலே!

உனக்கே உரியவன் நான் ஓவியமே, உயிர்நாடி

,

ஒவ்வொன்றும் உன்பெயரே கூறித்துடிப்பன, என்

மனத்தே எழுகின்ற

எண்ணமெல்லாம் உன்வண்ணம்

மறுகி நலியுமிந்த

நல்லிதயந் தன்னை நீ

தனக்கே உரிய தெனத்

தாங்கியணைத் தேந்திடுவாய்!

தருநோய் அதுவன்றித்

தனிமருந்து வேறிலைகாண்!

இனக்கேடு அடைந்தாலும்

இனமன்றி ஏதுதுணை?

மனக் கேடடைந்த நெஞ்சம் மனங்கொண்டு அருள்மதியே’4

- ராபர்ட் பர்ண்ஸ் கவிதைத் தமிழ் ஆக்கம்

மறுநாள் பொழுது விடிந்ததுமே மீரீ கிராமத்தில் எங்கும் ஒரே குழப்பமாயிருந்தது. பானேயியை மறுபடியும் காணவில்லை! மறுபடியும் மக்கள் நாலு திசைகளிலும் சென்று தேடினார்கள். ஆனால் எங்கும் பானேயியின் தடம் தென்படவில்லை. வயதில்

ளையவர்கள் இப்போது கூணாசூந்தி கிராமத்துக்கே சென்றார்கள். அங்கே நேரே ஜங்கியின் சிற்றன்னை வீட்டுக்குச் சென்று பார்த்த பொழுது, ஜங்கி மட்டும் அங்கே இருப்பது கண்டு வியப்பு அடைந்தார்கள். மீண்டும் பல இடங்களிலும் சுழன்று அவர்கள் இறுதியில் வந்து ஜங்கியையே கைப்பற்றினார்கள்.