பக்கம்:அப்பாத்துரையம் 31.pdf/107

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




90

அப்பாத்துரையம் - 31

கிழட்டுத் தாமேதின் கல்மனம்கூட இந்தத் தடவை துக்கத்தால் கரைந்துருகிற்று. பானேயி திரும்பி வந்தால், அவளை ஜங்கிக்கே கொடுப்பேன் என்று அவனும் தன் மனத்துக்குள்ளாக உறுதி செய்து கொண்டான்.

இரண்டு மூன்று நாட்களுக்குப் பின்னால் ஜங்கி தன் பகைமை, அவமானம், வெட்கம் எல்லாம் துறந்து விட்ட வனாய் கிழத் தாமேத், நிரமா ஆகியவர்கள் வீட்டுக்கு வந்தான். கிழவன் கிழவியர்க்குப் பணிவுடன் வணக்கம் செய்து, 'அம்மா, அப்பா! நான் எக் குற்றமும் செய்யவில்லை. உங்கள் பெண் தன் சிறு பருவ முதல் என் மீது அன்பு செலுத்தினாள். அவளை என்னிடம் அனுப்பத்தயவு செய்வீர்களானால், அவள் கட்டாயம் சுகமாக இருப்பாள், என்றான்.

தா : ஜங்கி, என் மனம் நைந்து போயிருக்கிறது, நீ வேறு வந்து ஏன் தொல்லை கொடுக்கிறாய்? அவளை எங்கேயாவது ஒளித்து வைத்திருந்தால், கூட்டிக்கொண்டு வந்து விடு. உன்முன் இப்போது கார்சிங் - கார்ட்டான் சாட்சியாகக் கூறுகிறேன். அவளை நான் உனக்கே கொடுத்து விடுகிறேன்!

நிர:ஆம்அப்பனே! எங்கேவைத்திருக்கிறாய்,என் குழந்தையை? போய்க் கொண்டுவா. உனக்கே அவளைத் தருகிறோம்.

தாமேத் - நிரமா ஆகியோர் வார்த்தைகள் கேட்டு ஜங்கி மகிழ்ச்சி அடைந்தான். ‘ஈசுவரன் இப்போது என்மீது அருள் பாலித்து விட்டான்' என்று அவன் எண்ணத் தொடங்கினான்.

'பெற்றோர்களே! இத்தடவை பானேயியை ஓடும்படி நான் சொல்லவில்லை.ஆனால் அவள் எங்கிருந்தாலும் தேடி உங்களிடம் கொண்டு வருவேன். நீங்கள் என்னிடம் ஒப்படைத்தாலும் ஒப்படையுங்கள், ஒப்படைக்காவிட்டாலும் வேண்டாம். அத்துடன் தந்தையே, அவளை நான் எங்கும் காணாவிட்டாலும், அல்லது அவள் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டிருந்தாலும் அப்போது ஜங்கியின் பெயரும் அத்துடன் மறைந்துவிடும் என்பதை அறிந்துகொள்ளுங்கள். அவளை அடையும் வரை எல்லா இடங்களிலும் தேடிக் கொண்டுதான் இருப்பேன்'

இவ்வாறு கூறிக்கொண்டு உறுதியான குறிக்கோளுடன் ஜங்கி பதாலிபாம் நோக்கிப் புறப்பட்டான்.