பக்கம்:அப்பாத்துரையம் 31.pdf/114

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




மலைநாட்டு மங்கை

97

புகுந்தான். ஆனால் புகுந்தது தான் தாமதம்! எங்கிருந்து, எப்படி வந்தார்கள் என்று அறிய முடியா வகையில், காட்டு மீரீகள் ஐந்து பேர் அவன் மீது பாய்ந்து வளைத்துக் கொண்டார்கள். அவர்கள் அவன் வாயை அடைத்துக் கட்டிக்கைகளை அரையில் சேர்த்துப் பிணித்த வண்ணம் இழுத்துக் கொண்டு போனார்கள்.

வாசகர்களே, இத்தடவை ஜங்கியின் மனத்தில் என்ன எண்ணங்கள் எழுந்தோடின என்று என்னால் வருணிக்க முடியாது. 'நான் என்ன பாவம் செய்தேனோ! இந்த மலை நாட்டு மீரீகள் கையில் சிக்கி இவ்வாறு கொண்டு போகப் பெற்றேனே' என்று அவன் அங்கலாய்த்தான். இரவாயிற்று, மலை மீரீகள் அந்த இரவை ஒரு மரத்தடியிலேயே தங்கிக் கழித்தார்கள். இரவு முழுவதும் அவனைச் சுற்றி நின்று காவலும் காத்தார்கள். அவன் கையிலிருந்த ரூபாய் பைசாக்கள் யாவும் அவனிடமிருந்து பறிக்கப்பட்டுப் போயின.

மறுநாள் மலை மீரீகள் அவனை மலைமேல் ஏற்றிக் கொண்டு சென்றார்கள். போகும் வழிகள் பயங்கரமாயிருந்தன. வழியில் எத்தனையோ கானாறுகள் ஓடின. அங்கங்கே மூங்கில்களால் உடனுக்குடன் பாலம் அமைத்து அவர்கள் அவற்றைக் கடந்து சென்றார்கள். மலையின் மேல் சென்ற பின்னும் அவர்கள் மேலும் மேலும் உயரச் சென்று மேற்குத் திசை நாடித் திரும்பினார்கள். இவ்வாறு மூன்று பகல் மூன்று இரவுகள் உணவு நீர் இல்லாமலே கழிந்தது. ஐந்தாவது நாள் மலை மேலுள்ள ஒரு கிராமத்தை அவர்கள் சென்றடைந்தார்கள்.

இதுதான் மலை மீரீகளின் நாடாயிருக்க வேண்டுமென்று ஜங்கி ஊகித்தான். அங்கே சென்றபின், அந்த ஐந்து மீரீகளும் ஜங்கியின் கைக்கட்டுகளை அவிழ்த்து விட்டார்கள். அதன் பின் அவர்களில் ஒருவன் கைச்சாடை காட்டி அவனை ஒரு வீட்டுக்கு அழைத்துச் சென்றான். உயிருக்குப் பயந்து ஜங்கி வாய் திறவாமல் அவன் பின்னால் சென்றான்.

-

அந்த மலை மீரீ ஜங்கியைத் தன் பரண் - மனைக்கு48 இட்டுச் சென்று பிரிங் று பாராங் மொழியில்9 தன் வீட்டிலுள்ள மற்றவர்களுடன் ஏதேதோ பேசினான். பின் ஜங்கியைக் கைச்சைகை மூலம் உட்காரச் சொன்னதும், ஜங்கி உட்கார்ந்தான். காய்ந்துபோன மாமிசத்துடன் ஒன்றிரண்டு ஊசிப்போன