மலைநாட்டு மங்கை
109
இதன் பின் பன்னிரு கிராமப் பஞ்சாயத்து நடவடிக்கைகள் ஏதோ ‘பிபிங் பிபிங்' என்றொலிக்கும் மொழியிலே, ஒன்றை முப்பத்து மூன்றாக்கும் வம்பளப்பு விதண்டாவாத
நடவடிக்கையாக மாறிற்று.
இறுதியில் ஆணை பிறந்தது.
'திருடனும் திருடியும் பாவம் செய்திருக்கிறார்கள்.
‘அவர்களைப் பேராற்றின் கரையில் இடுக!'
ஆம்! என்னவாயிற்று?
தீர்ப்புக் கூறப்பட்ட அந்தக் கணமே பிசாசுகள் போன்ற ஈன இரக்கமற்ற நாலு காட்டு மீரீகள் பானேயியையும் ஜங்கியையும் ஒரே கட்டாக வரிந்து வரிந்து கட்டத் தொடங்கினார்கள்.
துரதிர்ஷ்டம்
வாய்ந்த காதலர்களின் அழுகைக்
கூக்குரல்கள் வானைப் பிளந்தன.
ஜங்கி தன் கழுத்தைத் தானே வெட்ட முற்பட்டான். பின் கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் கட்டிய கைகளைக் கூப்பிக்கொண்டு பன்னிரண்டன் தலைவர் முன் மண்டியிட்டு இறுதி வேண்டுதல் விடுத்தான்.
‘பன்னிரண்டன் தலைவரவர்களே!
'என்னைக் கொன்று விடுவதற்கே உத்தரவு கொடுங்கள்! ஆனால் இந்தக் குற்றமற்ற சிறுமியையாவது உயிருடன் விட்டுவிடுங்கள்.
'அந்தோ, அந்தோ! என் கார்சிங்
தெய்வங்களே! வந்து எங்களைக் காப்பாற்றுங்கள்!
கார்ட்டான்
‘பன்னிரண்டன் தலைவரவர்களே! என் குற்றமற்ற இந்தச் செல்வ நங்கையைக் கொல்லாதீர்கள்! பன்னிரண்டன் தலைவரவர்களே, அவள் வயிற்றில் மீரீ மரபுக்குரிய புதிய செல்வம் இருக்கிறது!
‘பன்னிரண்டன் தலைவரவர்களே! ஆற்று வெளிகளிலேயே எங்கள் துன்பங்களுக்கு ஓர் எல்லையில்லை.