இந்து லேகா
153
அவன் உள்ளத்தில் தேக்கி வைத்திருந்த கோபதாபம் முழுவதும் இப்போது அவன் சொல்லிலும் செயலிலும் வந்து புகுந்தது.
'நான் விளையாட்டுப் பிள்ளையல்ல. நீயும் பள்ளிச் சிறுமியல்ல. சமயமும் ஒரு பெண்ணின் மாடியேறி ஒரு ஆண் வரும் நேரமல்ல - இது நள்ளிராப் போது!' என்றான்.
அவள் ஒன்றும் பேசவில்லை.பேசாமல் கீழே இறங்கிவந்தாள்.
அவள் அப்படி இறங்கி வருவாளென்று அவன் எதிர் பார்க்கவுமில்லை. இறங்கிவந்த சமயம் அவன் கண்களும் அப்பக்கம் சாயவில்லை. ஆகவே பின்புறமாக வந்து இந்துலேகா அவனைத் தன்மீது சாய்த்திழுத்து அணைத்துக் கொண்ட போது, அவன் திடுக்கிட்டான்.
அடுத்தகணம் அவன் தன் கண்களையே நம்ப முடியவில்லை! அவள் அவனைத் தன் கண்ணீரால் குளிப்பாட்டினாள். முத்தங்களால் உடலில் பூமாரி பெய்தாள். அவன் அரையில் கைகோத்தவண்ணம், பாதி இழுத்தும் பாதி தூக்கியும் அவனை மாடிக்கே இட்டுச் சென்று தன் மலரணையில் கிடத்தி, கையில் விசிறியுடன் அருகே வந்தமர்ந்தாள்.
66
“அந்தோ, மாது! உனக்கேன் இத்தனை வீண் கவலை? உன்னையே நான் என்றோ என் வாழ்க்கைத் துணைவனாக, ஏன் கணவனாகத் தேர்ந்தெடுத்து விட்டேனே! உனக்காகவே, உன்னுடனேயே நான் இருக்கிறேனே! அப்படியிருக்க, உனக்கு ஏன் இத்தனை ஐயப்பாடு? இவ்வளவு மனக்கலக்கம்?” என்றாள்.
அவன் ஐயப்பாடும் கலக்கமும் யாவும் ஒரே இன்பப் புயலாக இப்போது சுழன்றடித்தது.
"இந்த இந்து உனக்கே சொந்தம்! மாதவி என்று நீ அழைத்தபோதே நான் மாதவனாகிய உனக்கு உரியவளாகி விட்டேன்" இந்தச் சொற்களுடன் தொடங்கி, கன்னியின் வாய்மொழியிலிருந்தே, அவள் உள்ளத்திலே இத்தனை காலம் அடங்கிக் கிடந்த காதல் வரலாறு முழுவதும் அவன்முன் திரை திரையாக அலை வீசின. அவையே அவனுக்கு அன்றுமுதல் ன்பக் கவிதையாய், கனவிலும் கிட்டுதற்கரிய நனவாரமுதமாய் அமைந்தது.