இந்து லேகா
157
நாட்கள் அருமை என்ற நிலைபோய், கோபமில்லாத நாழிகையைக் கண்டுபிடிப்பது அரிது என்ற நிலையாயிற்று.
தரவாட்டில் எவருமே பெரியவர்கள் சிறியவர்கள், ஆடவர் பெண்டிர் - யாருமே அவர் விருப்பத்துக்குக் குறுக்கிட அஞ்சினார்கள். சின்னஞ் சிறுவர்முதல் அவரை அணுகுவதற்கே - அவர் முன்னிலையில் செல்வதற்கே நடுநடுங்கினார்கள்.
பஞ்சுமேனவன்
கோபத்திலிருந்து தப்பியிருந்தவர், அதிலிருந்து ஒதுங்கியிருந்தவர், அதற்கு ஆளாகாதவர் ஆகியோரும் ஒருசிலர் இருந்தனர்.
தன் மனைவி குஞ்சுக்குட்டியம்மை, மகள் இலட்சுமிக் குட்டியம்மை ஆகிய இருவரிடமும் பஞ்சுமேனவன் குடும்ப பாசத்தில் சிறிதும் குறைவில்லாமலே நடந்து வந்தார். அவர்களுக் கென்று பூவள்ளியிலேயே தனியிடமும் ஒதுக்கிக் கொடுத்திருந்தார். இதனால் தரவாட்டின் பொது ஆட்சியிலுள்ள கடுமை அவர்கள் பக்கம் செல்லாமலே இருந்தது.
மகன் கொச்சுகிருஷ்ணமேனோன், மாதவன் தந்தையாகிய கோவிந்தப் பணிக்கர் ஆகியோர் பஞ்சுமேனவன் கோபத்துக்கு ஆளானதே கிடையாது. அதுமட்டுமன்று, அவர் மதிப்புக்கும் அன்புக்கும் அவர்கள் ஒருங்கே பாத்திரமாயிருந்தனர். அதிலும் கொச்சுகிருஷ்ண மேனோன் முன்னிலையில், அவர் தன் கோபத் ாபங்களைக் காட்டுவதே கிடையாது. மகன் நல் லெண்ணத்தையும் நன்மதிப்பையும் பெறுவதில் தந்தை அவ்வளவு உன்னிப்பாயிருந்து வந்தார்! இதனால் தரவாட்டுக்குக் கொச்சுகிருஷ்ண மேனோன் வந்தபோதெல்லாம், குடும்ப உறுப்பினரும் குடிமக்களும் ஒருங்கே அச்சப்பேயினின்று முழுநிறை விடுதலை பெற்றனர்.
பஞ்சுமேனவனின் இயற்கைப் பாசம் முழுவதற்கும் உரியவளாக வளர்ந்தவள் இந்துலேகா. இந்தப் பாசத்துடன் கொச்சுகிருஷ்ண மேனோனிடம் அவா கொண்ட மதிப்பும் அச்சமும் பேரளவு பங்குகொண்டது.அவள் மீது காற்றடிக்க அவர் பொறுப்பதில்லை. அத்துடன் தன் கோப ஆட்சியின் சிற்றலைகூட அவள்பக்கம் சென்றுவிடக் கூடாதென்பதில் அவர் முன் னெச்சரிக்கை யுடைவராயிருந்தார்.
கொச்சுகிருஷ்ணமேனோனுக்குப் பின், இந்துலேகாவிடம் பஞ்சுமேனவன் பாசமும் மதிப்பும் பன்மடங்கு வளர்ந்தன.