பக்கம்:அப்பாத்துரையம் 31.pdf/181

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




164 ||.

அப்பாத்துரையம் - 31

நாளையே -ஏன் இன்றைக்கே- இன்றிரவே - அந்த நம்பூதிரிக்கு இங்கே வரும்படி கடிதம் எழுதிவிடுங்கள். இந்துலேகாவைப் பற்றி நான் பேச்செடுத்ததாகக் கூற வேண்டாம். நீங்களாக எழுதுவதாக எழுதிச் சீக்கிரம் வரவழைத்து விடுங்கள். இந்துலேகாவை அவர் ஒன்று பார்க்கட்டும். அவர் பார்வையில் அவள் வடிவழகு விழட்டும். அப்புறம் இந்துலேகா உள்ளம் உருகுவதை நான் ஒரு தடவை காணவேண்டும். அது உருகுமல்லவா? இலட்சுமிக்குட்டி!’

"கட்டாயம் உருகும், உருகாமல் என்ன செய்யும் என்று ஒத்தூதினாள் இலட்சுமிக்குட்டி.

பஞ்சுமேனவன் அன்றிரவு மீந்தநேர முழுவதும் காலை நேரத்தில் பாதியும் அயர்ந்து உறங்கினார்.புயலுக்குப் பின் அமைதிநிறைந்த நிலவாக இலட்சுமிக்குட்டி, கேசவன் நம்பூதிரி இருவருக்கும் இராப்பொழுது கழிந்தது.

என்று

இந்துலேகா மனசு எப்படி இருக்குமோ இலட்சுமிக்குட்டிக்குச் சிறிது அச்சம் உண்டு. ஆனால் கேசவமேனோன் வீரபராக்கிரம உரைகள் விரைவில் அவள் தாயுள்ளத்தைக் கூட அமைதிப்படுத்த முடிந்தது.

“பார் இலட்சுமி! உன் அழகெங்கே? நான் எங்கே? இன்று எனக்கிருக்கும் பஞ்சுக்கம்பெனி வரும்படிகூட நான் உன்னைத் தேடும்போது இருந்ததில்லையே! நீ என்னிடம் மசியவில்லையா! மூர்க்கில்லத்து நம்பூதிரிப்பாடு அழகன், மன்மதன். அவன் பணமோ திருவாங்கூர் பொன்னுதம்பிரானை விலைக்கு வாங்கப் போதும்! இந்த இரண்டிலும் இந்துலேகா என்ன, அவள் பாட்டி கூட மசிந்து கரைந்து போவாள்!' என்றார் நம்பூதிரி.

கள்ளங்கபடமறியாத இலட்சுமிக்குட்டி 'பாட்டிகூட என்ற உயர்வு நவிற்சி கேட்டுச் சிரித்தாள். எதற்காகச் சிரித்தாள் என்றறியாமல் கேசவன் நம்பூதிரியும் கூடவே சிரித்தார்.!

>