பக்கம்:அப்பாத்துரையம் 31.pdf/186

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இந்து லேகா

169

'நீங்கள் இருவரும் பேசிக் கொண்டிருந்தால் காலையும் மாலையும் தெரிவதில்லை. அங்கே மாதவன் தன் அப்பாவைச் சாப்பாட்டுக்குக் காத்திருக்க வைத்துவிட்டு, அதை மறந்து இங்கே பேசிக்கொண்டிருக்கிறான்”! என்றாள்.

மாதவன் கைக்கடிகாரத்தைப் பார்த்தான். மணி பத்தரை! 'ஐயையோ! என்ன பிழை செய்துவிட்டேன்! நான் பின்னால் வருகிறேன், இந்து!' என்று கூறிவிட்டு விரைந்தான்.

கோவிந்தப் பணிக்கருக்கும் மாதவனுக்கும் இலைபோட்டு உணவு பரிமாறப்பட்டிருந்தது.கோவிந்தப் பணிக்கர் உண்ணாமலை மாதவனுக்காகக் காத்துக் கொண்டிருந்தார். சோறு ஆ, அலந்து போய்க்கொண்டிருந்தது.

'ஏன் இவ்வளவு நேரம், குழந்தாய்!' என்றார் கோவிந்தப் பணிக்கர்.

மா: நான் ஓராளுடன் பேசிக் கொண்டிருந்து விட்டேன்.என் மறதியால் நீங்கள் காத்திருக்கும்படியாயிற்றே என்று வருந்துகிறேன்.

கோவிந்தப்பணிக்கர் சிரித்துக் கொண்டார். 'வருந்துகிறோம்' என்று கூறு, மாதவா? இது மாதவன் ஒரு ஆளின் குற்றமல்ல. கூட இருந்த இந்துலேகாவின் குற்றமும் அதில் உண்டு என்றார்.

மாதவன் வெட்கத்தால் தலைகுனிந்தான். இருவரும் உணவு முடித்து, அமர்ந்தனர்.

கோவிந்தப்பணிக்கர் மகனை ஆவலுடன் அருகிருத்தி அணைத்துக் கொண்டார். தந்தையும் மகனும் இருந்த இருப்பைப் பார்வதியம்மாவும் வந்து கண்குளிர நோக்கிச் சிரித்துக் கொண்டிருந்தாள்.

கோ.ப: பார்வதி, மாதவன் பிறந்தவுடன் என் ஆசை நிறைவேறிவிட்டது. இப்போது உன் ஆசையையும் மாதவன் விரைவில் நிறைவேற்றப் போகிறான்.

பார்:என் ஆசை வேறு, உங்கள் ஆசை வேறா?

கோ.ப: தாயும் பிள்ளையும் ஒன்றானாலும் வாயும் வயிறும் வேறுவேறு அல்லவா? என் வேலையில் மாதவன் எனக்குத் துணை செய்ய முடியும்! உன் வேலையில் ஒரு இந்துலேகா தானே...