இந்து லேகா
175
அவனை வாயிலை நோக்கித் தள்ளிக் கொண்டே சென்றார். கோபாலன் போகாமல் அவரை எதிர்த்துத் தள்ள முயன்று கொண்டிருந்தான்.
இத்தறுவாயில் சங்கரமேனோன் வந்து தடுத்திராவிட்டால், பஞ்சுவின் கோபம் அவர் மதிப்புக்கே கேடு செய்திருக்கும். அவர் கோபாலனை விடுவித்து வெளியேற்றி, சாத்தரையையும் வெளியே செல்லும்படி சமிக்கை செய்தார்.
பஞ்சு அன்று நினைத்து நினைத்து மீண்டும் மீண்டும் கோபாலனையும் சீனுப்பட்டரையும் வரவழைத்துத் தன் கோபத்தைக் காட்டினார். கோபாலனிடம் பாட்டத்துக்கு விட்ட பாம்புகளை ஒழித்துத்தந்துவிடும்படிகட்டளையிட்டார்.அவற்றை ஏற்கெனவே குடியானவர்களுக்கு வாரத்துக்கு விட்டாய்விட்டது என்று கோபாலன் கூறிச் சிரித்தான்.
அவர் கோபத்தில் அவனை அடிக்க எழுந்தார்.
அவன் ஓடினான்.
அவர் அவன் பின்னே ஓடினார்.
முதுமையின் தளர்ச்சியும் கோபமும் சேர்ந்து அவர் உடலைத் தள்ளாட வைத்தது. அவர் தடுக்கி விழுந்து முட்டில் காயமுற்றார்.
சங்கரமேனோன்
அவரைக்
கைத்தாங்கலாகப்
கோபம்
பிடித்திராவிட்டால், தரவாட்டுக்கே இடர் வந்திருக்கும். அத்துடன் சங்கரமேனோன் அவருக்குத் தக்கபடி பேசி ஆற்றுவித்ததுடன், காலுக்கும் கட்டுக்கள் கட்டி மருந்திட்டார்.
சீனுப்பட்டரைப் பஞ்சு மீண்டும் சந்திக்க நேர்ந்தது. பேச்சு மீண்டும் வளர்ந்தது.
'அடே, நீ இனி இந்தத் தரவாட்டில் காலடி வைக்கக் கூடாது. இந்த வினாடியே வெளியே போய்விடு' என்றார்.
‘அது கும்மிணியம்மாவிடம் கேட்டுச் செய்யவேண்டிய முடிவு!' என்றார் சீனு.
'சரிடா! என் அம்பலத்திலும் ஊட்டுப் புரையிலும் இனி நீ உணவு தெண்டிப்போகப்படாது!' என்றார்.