188
அப்பாத்துரையம் - 31
அவர்கள் பசப்புரைகள், அவர்கள் அழகு வருணனைகள் ஆகியவற்றையே பெருமையாகக் கொண்டு திரும்பத் திரும்ப எடுத்துரைத்து மகிழ்வான். கேட்பவர் நடிப்புக்கும் கும்மாளத்துக்கும் ஏற்ப இந்தக் கதைகளும் வாலும் தலையும் பெற்று வளரும்.
கேசவன் நம்பூதிரியுடன் கடிதத் தொடர்புகொண்டு பஞ்சுமேனவன் ஆர்வத்தைத் தூண்டியவன் இந்த நம்பூதிரியே. கேசவன் நம்பூதிரியின் முதற்கடிதம் வந்தபோது, அவன் அயலூரில் தனக்கறிமுகமான ஒரு எம்பிராந்திரியைக் காணச் சென்றிருந்தான். வழியில் அவன் செய்த ஒரு கோமாளித்தனமான காரியத்தை அவன் ஒரு புதிய வீரதிரப் பராக்கிரம மாக்கி, நண்பர் சூழலில் பெரிதாக அளந்தான். உள்ளூர அவனை நையாண்டி செய்து நகைத்து வேடிக்கை பார்க்கும் கும்பல் வளர்ந்தது. அவன் கோமாளிப் புகழும் பெருகிற்று.
தனால்
தொழில் காரணமாக அவன் ஒரு வெள்ளைக்கார முதலாளியைக் காணவேண்டியிருந்தது. வெள்ளையன் மனைவியுடன் அவனை வரவேற்றான். சூரிய நம்பூதிரிப்பாடு வரவேற்ற முதலாளியைக் கவனிக்காமல், அவன் மனைவியான வெள்ளை மாதின் கட்டழகிலே ஈடுபட்டு வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்துவிட்டான். இதில் வியப்பென்ன வெனில், சூரி இதற்காக வெட்கமடையவில்லை. இதையும் பெருமையாக அளந்தான். வெள்ளைமாது கணவன் முன்னிலையிலேயே தன் கைப் பிடித்துக் குலுக்கியதையும் சிரித்துப் பேசியதையும் அவள் தன்னிடம் கொண்ட காதலுக்கறிகுறியாக கருதி மகிழ்ந்தான்.அது வெள்ளைக்காரர் வழக்கமே என்பதைக் காட்டாளாகிய அவன் அறிந்து கொள்ளவில்லை.
அது மட்டுமன்று, வெள்ளை மாது அவனுடன் தனியே தோட்டத்தைக் கொண்டு சுற்றிக் காண்பித்தாளாம்! கணவன் முன்னிலையிலேயே அவனைத் தன்னருகில் இருத்திக் கொண்டு பேசினாளாம்! அம்மாது சூரியின் வைரமோதிரத்தை ஆசையோடு பார்த்ததனால், அவன் அதை அவளுக்குப் பரிசளித்து விட்டு அவள் தன்னை ஏற்றதாகக் கும்மாளமிட்டான். அவன் எத்தகைய பேயனென்று கண்ட வெள்ளையர் குறும்பாக அவன் கைக் கடிகாரத்தை ஆர்வத்துடன் பார்த்தாராம்! அவரும்