பக்கம்:அப்பாத்துரையம் 31.pdf/206

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இந்து லேகா

189

தன்னிடம் மயங்கிவிட்டதாக நினைத்து, சூரி கைக்கடிகாரத்தை யும் அவருக்குப் பரிசளித்து விட்டு வெற்றியுடன் மீண்டானாம்!

கண்ணழிமனையெங்கும் நண்பரிடையேயும் வேலைக் காரரிடையேயும் பெண்களிடையேயும் சூரிநம்பூதிரியின் கோமாளித்தனமே பேச்சாயிற்று!

கேசவன் நம்பூதிரியின் முதற்கடிதம் சூரிநம்பூதிரியின் கண்படாமலே கிடந்தது. ஆனால் மறுகடிதம் வந்தபோது அவன் குளிப்பறையில் எண்ணெய் தேய்த்துக் கொண்டிருந்தான். கடிதத்தை அவன் காரியக்காரன் தாச்சுமேனோன் வாசித்துக் காட்டிக்கொண்டிருந்தான். கடிதம் ஒரு பெண்பற்றியதென்று நம்பூதிரி கனவிலும் கருதியிருக்கவில்லை. ஆனால் பெண் என்ற சொல் காதில் விழுந்ததே, அவன் எண்ணெய்க் கிண்ணத்தைத் தடாலென்று தட்டிக் கொட்டிக்கொண்டு எழுந்திருந்தான். 'அடே கோவிந்தா! அடே கோவிந்தா!...அடே கோவிந்தா!" என்று கூவினான்.

கோவிந்தன் நம்பூதிரிப்பாட்டின் அடைப்பக்காரன்.அவன் குறிப் பறிந்து நடக்கும் திறமையுடையவன். உலகமறிந்தவன். நம்பூதிரிப் பாட்டின் போக்கையும் நன்கறிந்து நடப்பவன். அவனது ஆழ்ந்த சூழ்ச்சி நயமும் நகைச் சுவையும் குறும்புத்தனமும் அவனை நம்பூதிரிப் பாட்டின் வலக்கை ஆக்கியிருந்தன.நம்பூதிரிப் பாட்டிடம் அவன் குறும்பும், நகைத்திறங்களும் பெரும்பாலும் சொல்லளவிலும் நடிப்பளவிலும் நின்றன. ஏனெனில் அவன் நம்பூதிரியிடம் உள்ளார்ந்த பற்றுதல் உடையவன். தலைவன்

துன்பப்ப அவன் பார்க்க மாட்டான். அத்துடன் தலைவனுக்கிசைய நடக்கும் திறமையுடையவன்.

நம்பூதிரிப்பாட்டின் கூக்குரல் கேட்டு அவன் ஓடோடி வந்தான். 'என்ன ஆண்டே! என்ன செய்தி? என்ன நிகழ்ந்து டது?' என்று கேட்டுக் கொண்டே வந்தான்.

"கோவிந்தா, கோவிந்தா! என்ன நேரம் வேளை தெரியாமல் எங்கோ போயிருக்கிறாய்? வர ஏன் இவ்வளவு தாமதம்?.. சரி, சரி, போ. உடனே போ! விரைந்து ஒரே தாவில் தாவிப்போய், செறுசேரி நம்பூதிரியை நான் அவசர அவசரமாகக் கூப்பிட்டே னென்று சொல்லி, அவரைக் கையோடு அழைத்து வா!" என்றான்.