மலைநாட்டு மங்கை
5
இச்சமய முதல்தான் பர்தலாய் தம் முன்னோர்களின் வாழ்க்கைக் காலத்தோடு ஒன்றிக் கிடந்த ‘மான்' ஊழியின் வரலாற்றைத் தமக்கேயுரிய ஒரு தனிப் பகுதியாக்கிக் கொண்டார் என்று கூறவேண்டும். அவ்வூழியின் பயங்கர சம்பவங்களின் எதிர் நிழல்களை நாம் அவரது பிற்கால நாவல்களிலே மீண்டும் மீண்டும் காண்கிறோம். ரங்கீலீ (1925),நிர்மல பக்தன் (1926), 'தாமிரேசுவரி மந்திர்' (1926) ரயதாய் லிகிரி (1926) முதலிய இந்த ஏடுகள் சரித்திரமே படிக்காதவர்கள் மனக் கண் முன்னும் சரித்திரத்தை ஒரு சித்திரமாக்கிக் கொண்டுவந்து நிறுத்தி விடும் தனிப்பட்ட தன்மை உடையவை ஆகும்.
‘ராதா -ருக்மணி' என்ற நாவல் மூலம் பர்தலாய் ‘மான்’ படையெடுப்பு ஊழிக்கு முற்பட்ட அசாம் வரலாற்றின் ஒரு ஒளிமிக்க நிகழ்ச்சியைக் கூட ஆதாரமாக்கி எழுதியுள்ளார் மாயா மரியா வைணவ சம்பிர தாயத்தவர்களின் கிளர்ச்சி பற்றிய சம்பவமே அது. இது போலவே மணிபுரியின் கர்ண பரம்பரை வரலாற்றுச் செய்தியான 'காம்பா -ஓ-தோய்பி' என்பதனை யும் அவர் ஒரு நாவலின் உருவமாக்கித் தந்துள்ளார்.
ஆசிரியரது வரலாற்றார்வம் எவ்வளவு, மனித சமுதாய ஒத்துணர்வு எவ்வளவு என்பதை யெல்லாம் இச்செய்திகள் நமக்கு நன்கு எடுத்துக் காட்டுகின்றன.
பர்தலாயின் வரலாற்று நாவல்கள் வரலாற்றின் நிகழ்ச்சிப் போக்கிலேயே இழைத்து செல்லும் கட்டுப் பாட்டுக்கு உரியனவாயினும், இக்காரணத்தினால் அவருடைய படைப்புக் கலைத் திறத்துக்கு எத்தகைய தடங்கலும் ஏற்பட்டிருக்கவில்லை என்று துணிந்து கூறலாம். அத்துடன் அவரது முதல் நாவலாகிய மீரீ ஜீயரி அதாவது ‘மீரீ மக'ளில் வரலாற்றின் இந்தக் கட்டுப்பாடு ஒரு சிறிதும் கிடையாது. வேண்டுமானால் இது பற்றிய நாட்டமே அவர் உறக்கத்தைப் பாழடித்து விட்டது என்று மட்டும் கூற இடமுண்டு. இச்சமயத்திலே அவர் அசாமின் வரலாற்றாசிரியாரான ஸர் எட்வர்டு கேட் என்பாரின் வற்புறுத்தலின் பேரில் மீரீ மக்களின் மதச் சடங்குகள், பழக்க வழக்கங்கள் ஆகியவற்றில் சில ஆய்வாராய்வுகள் நடத்தி வந்தார். கேட் பெருமகனாரின் தூண்டதலுரைகளே 'மீரீ மகள்' இயற்றுவதற்குக் காரணமாயமைந்திருந்தது என்பதை அவரே