பக்கம்:அப்பாத்துரையம் 31.pdf/252

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இந்து லேகா

235

சூ.ந: கதவைத் தட்டி இன்னும் ஒருமுறை கேட்பது தானே? கே.ந: கேட்டாய்விட்டது. உறங்குகிறேன். கதவு திறக்க முடியாது என்று கூறிவிட்டாள்.

இச்சமயம் செறுசேரி தலையிட்டார்.

"நாம்தான் நாளையும் இங்கேதானே இருக்கிறோம். ஏதோ சிறு தலைவலியாகத் தான் இருக்கும். நாளை சாப்பாட்டுக்கு மேல் பாடச் சொல்லித் தாராளமாய் கேட்கலாம். இப்போது நாமும் நேரத்தில் தூங்கினால் காலையில் நேரத்தில் எழுந்திருக்கலாமே!” என்றார்.

வேறு வழியில்லாமல் சூரி நம்பூதிரி இதனை ஏற்க வேண்டியதாயிற்று.

எல்லாரும் படுக்கைக்குச் சென்றனர்.

சூரிநம்பூதிரிப்பாடும் கோவிந்தனுமே மீந்தனர்.

அவன் படுக்கைக்கு வேறிடம் ஏற்பாடு செய்ய யாரும் முயற்சி எடுத்துக் கொள்ளவில்லை. ஆகவே அவனுக்குக் கோவிந்தனே நாலுகட்டில் படுக்கைப் போட வேண்டியதாயிற்று.

அரசுநிலையிலுள்ள தன் தலைவனுக்கு மாளிகையில் கூடப் படுக்கை ஏற்பாடு செய்யாததுப் பற்றிக் கோவிந்தனுக்குக் கோபம் வந்தது.ஆனால் சூரி அவனை அமைதிப் படுத்தினான். 'நாம் வந்த காரியத்தைக் கவனிப்போம் இங்கே வந்ததே நம் மதிப்புக்கு அடுக்காது. ஆகவே மதிப்புப் பற்றிய பேச்சை இப்போது எடுக்க வேண்டாம்' என்றான் அவன்.

குடும்ப வாழ்வு இன்னதென்று தெரியாதவன் சூரி நம்பூதிரி. சம்பந்தம் செய்து கொள்ளாதவன். ஆனால் அல்லியோ, வல்லியோ, முல்லையோ, மொக்கோ ஏதாவது சில பல பெண்கள் கூட்டுறவில்லாமல் ஒரு முழுப் பகல் நேரம் கூடக் கழித்தறியாதவன் அவன். பூவள்ளித்தரவாட்டில் இந்துலேகாவின் கனவன்றி வேறு பெண் தொடர்பில்லாது தனியே கிடக்க முடியாமல் அவன் தத்தளித்தான்.

மணி பன்னிரண்டாயிற்று. எல்லாரும் ஆழ்ந்த துயிலை அணைத்துக்கிடந்தனர்.ஆனால் சூரிமட்டும் பல வகையிலும் மனம் குழம்பினான்.படுக்கவும் முடியாமல் உறங்கவும் முடியாமல்