பக்கம்:அப்பாத்துரையம் 31.pdf/263

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




246

அப்பாத்துரையம் - 31

இலட்சுமிக்குட்டியம்மா, மூலம் கேசவன்நம்பூதிரி இந்துலேகாவின் இணக்கமறிந்து நம்பூதிரிப்பாட்டிடம் வந்தார். இந்துலேகாவைப் போய்க் காணலாம் என்றார்.

இத்தடவை செறுசேரி மட்டுமன்றி, கேசவன் நம்பூதிரியைக் கூடக்கீழே இருக்கும்படி கட்டளையிட்டு, அவன் இந்துலேகாவின் மாடி ஏறிச் சென்றான்.

ஆணவத்துடனும் முறுக்குடனும் நடந்துகொள்ள வேண்டும் என்ற நம்பூதிரிப்பாட்டின் திட்டம் இந்துலேகாவின் முகவொளியைக் கண்டபோது கரையத் தொடங்கிற்று. ஆயினும் அவன் தன்னையடக்கிக் கொண்டு திட்டப்படி நடக்கத்தொடங்கினான்.

'அறிவுடைச் சான்றோருக்கு அணங்கும் புல்லும் சமம்' என்ற

முதுரையை நீ கேட்டதுண்டா என்று வலிந்து இறுமாப்புத்தொனியை மேற் கொண்டவாறு கேட்டான்.

கேள்வி, கேள்வியின் தொனி, கேட்டசந்தர்ப்பம்,கேள்வியின் நோக்கம், நடிப்பு எல்லாம் சேர்ந்து எல்லாம் சேர்ந்து இந்துலேகாவின் நகைச்சுவையைப் பலமாகக் கிளறின. அவள் தன்னையடக்க முடியாமல் கலகலவென்று சிரித்தாள்.

அவள் சிரிப்பின் அலையடங்கும்வரை அவன் அவளைப் பார்த்துக்கொண்டேயிருந்தான்.

சூ.ந: ஆகா, சிரிப்பின் கலையைக்கூட இங்கிலீஷ்

அலையலையாக வந்து அவள் முகம் முழுதும் சிவக்கவைத்தது. அதை மறைக்க அவள் அறைக்குள் சென்றாள். இனி அவள் வரமாட்டாளோ என்ற கவலை நம்பூதிரிப்பாட்டைப் பிடுங்கித் தின்னத்தொடங்கிற்று.

'போய் விடாதே, இந்துலேகா! நான் இனி ஒன்றும் புண்படப் பேச மாட்டேன்' என்றான் சூரி.

66

"நான் போகவில்லை, இதோ வந்துவிட்டேன்' என்று உள்ளிருந்தே குரல்கொடுத்த வண்ணம் முகம்கழுவித் துடைத்துக் காண்டு இந்துலேகா மீண்டும் வெளியே வந்தாள்.

நம்பூதிரிப்பாடும் இதன்பின் தன் புதிய ஆணவக் கோமாளித்தனம் விட்டுப் பழைய கோமாளிப்பேச்சை தொடங்கினான்.