பக்கம்:அப்பாத்துரையம் 31.pdf/60

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




மலைநாட்டு மங்கை

43

ஆற்றின் சௌந்தரிய லாகிரி கணத்துக்குக் கணம் உள்ளத்தைக் கவரத்தக்க விதவிதமான அலங்காரங்களுடன் மாறிமாறிக் காட்சி தந்தது. இத்தகைய வண்ணக் காட்சிகளை நாம் வருணிக்க முயன்றாலும், அதற்கு எமது எழுதுகோல் இடம் தராது. அதற்குரிய ஆற்றலும் எம்மிடம் இல்லை. யாராவது இங்கே குறிப்பிட்ட பருவத்தில், குறிப்பிட்ட சமயம் பார்த்து 'பதாலி பாம்’42 பகுதிக்குச் சென்று படகில் சோவன்ஷிg மீது தவழ்ந்து திரிந்தால், நாம் இங்கே வருணிக்காது விட்ட காட்சிகளை யெல்லாம் நேரே காணலாம். ஆயினும் அவற்றை வருணிப் பதற்குரிய கவித்துவ சக்தி அமைந்திருந்தால்கூட, அதை வருணிக்க ஒரு முழுப் புத்தகமே தேவைப்படும்.

உண்மையில் ஐப்பசி கார்த்திகை மாதங்களில் சோவன்ஷிg ஆற்றுநீர்ப் பரப்பில் மாலை நேரத்தில் படகேறி உலவுவது என்பது கண்கொள்ளாக் காட்சி விருந்தேயாகும். இயற்கையின் சௌந்தரியம் அங்கே எவரையும் மோகலாகிரியில் மிதக்கச் செய்துவிடும். இத்தகைய மாயக் காட்சிகளைப் படைத்த கருணாகர மூர்த்தியாகிய பரமேசுவரனிடத்தில் காண்பவர் பக்தியை இது பன்மடங்காக வளரச் செய்துவிட வல்லது.எழுச்சி குன்றிய உள்ளம் படைத்தவர்கள்கூட இத்தகைய சந்தர்ப் பங்களில் எழுச்சிமிக்க கவிதையுள்ளம் பெற்றவர்களாகி, அக் கவிதையிலேயே தம்மை மறந்தவர்கள் ஆகி விடுவார்கள்.

இத்தகைய சமயத்தில்தான் - இத்தகைய மனமோகன மான சந்தர்ப்பத்தில்தான் - சோவன்ஷிரீயின் மறுகரையிலிருந்து ஒரு சின்னஞ்சிறு படகில் ஐந்து மீரீ இன இளம் பெண்கள் வந்து கொண்டிருந்தார்கள். ஐந்து நங்கையர்கள் முகத்திலுமே ஆனந்தம் கூத்தாடுகிறது - ஐவர் இதழ்களிலுமே புன்னகை தவழ்கின்றது. ஐவரும் நேர்த்திமிக்க தூய ஆடைகள் தரித்துத் தோளணிகளும் மேகலையும் அணிந்திருக்கிறார்கள்.

படகு சின்னஞ்சிறிய படகு; மிகமிகச் சிறிய படகு. மற்றவர்களானால், ஐந்து பேரென்ன, மூன்று பேர்கூட அந்தப் படகில் ஒருங்கிருந்து செல்ல முடியாது. ஆனால் நாம் மேலே குறித்துள்ளபடி eg இனத்தவர்மீது சோவன்ஷிரீ அன்னையின் பாசம் சொல்லுந்தரத்தது அன்று. இதனால் மீரீ மக்கள், மூன்று நான்கு வயதுப் பிள்ளைகள் முதற்கொண்டு, எவ்வளவு