மலைநாட்டு மங்கை
49
அவல விதி நமக்கு - உவலையே செய்யினும்
உவகையதாம் வரை - காத்திருப்போம்
(கவலை)
அவதியில்லாமல் - தவலுறும் வாய்ப்பே
கவர்ந் தின்புறும் வரை- காத்திருப்போம்
(கவலை)
பாட்டுடன் சேர்ந்து பாடிய இளைஞன் உகைக்கும் படகும் eg இள நங்கையர்கள் இருந்த படகை நோக்கி அணுகிச் சென்று கொண்டிருந்தது. நம்பியைக் கண்டு நங்கையர் பேச்சுத் தொடங்கு வதற்கு முன்பே பானேயியின் பாடல் குரல் கொடுத்துவிட்டது. இப்படிப் புரட்டினாலும்
விதி எனை
அப்படி உருட்டினாலும்
மெய்ப்படி பொடி செய்தாலும்
விடுகிலேன் உறுதி, நாதா!
செப்படிச் சதியினாலே,
விதி எனைத்
தப்பெண்ணங் கொள்ளச் செய்தால்
அப்பொழுது என்னால் ஒன்றும்
தவறில்லை, அறிதி நாதா!
பானேயி பாடிக்கொண்டிருக்கும் போதே படகுகள் ஒன்றை ஒன்று நெருங்கி இணைந்தன. ஜங்கியைக் கண்டதுமே மற்ற நங்கையர் எல்லாரும் ஒரே குரலில் 'ஓகோ, நீ தானா பாடியது,' என்று கேட்டனர்.
ஜங்கி : ஆம், நானேதான்.
ரகமி : இதுவரை நீ எங்கே போயிருந்தாய்?
ஐங்கி : தாமேன் காமின்
தட ம் வரை.
ரகமி : அங்கே என்ன வேலையோ?
ஜங்கி : அங்கே ஒரு ஆளிடம் எனக்குப் பத்து ரூபாய் வரவேண்டியிருந்தது. அதை வாங்கப் போயிருந்தேன்.
பானேயி : அது கிடைத்ததா?