பக்கம்:அப்பாத்துரையம் 31.pdf/74

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




மலைநாட்டு மங்கை

57

அந்தக் கிராமத்தின் இளநங்கையர்களுள் ஒருத்தி டாலிமி என்னும் பெயர் உடையவள். அவளுக்கு வயது ஏறத்தாழப் பதின்மூன்று, பதினான்கு இருக்கும். அவள் அந்தக் கிராமத் தலைவன் புதல்வி. மீரீ இள நங்கையர்களுக்குள்ளே எல்லாரை யும் விட மிக நன்றாக நடனமாடுபவள் அவள்தான். அதைப் போலவே ஜங்கி குழல் வாசிப்பதில் போட்டியற்ற

வல்லாளனாயிருந்தான். க்காரணத்தால் டாலிமியின் உள்ளத்தில் ஜங்கியிடம் ஒரு கவர்ச்சி அங்குரித்து வளர்ந்து வந்தது. இதனால் என்றாவது ஜங்கி விழாக் கேளிக்கைகளில் கலந்து கொள்ளாவிட்டால், அன்று டாலிமியின் ஆடல் பாடல்களில் சுரத்தே இருப்பதில்லை.

ஜங்கி தன் இதய தேவியான பானேயி பற்றிய விவரங்களை அறிவதற்காகச் சோவன் ஷிரீ தீரத்திலுள்ள தன் கிராமத்திற்குப் போய்விடும் நாளெல்லாம், டாலிமியின் முகம் சுண்டிக் கறுத்துவிடும். இவ்வளவுக்கும் அவன் சோவன் ஷிரீ போய் வருவதன் இரகசியம் அவளுக்கு ஒன்றும் தெரியவராது. அவனை அவள் விரும்பினாளே தவிர, அவன் இதயத்திலுள்ள செய்திகள் எதையும் அவள் அறியவில்லை. ஆயினும் அவன் இதயத்தின் இயல்பை அவள் முற்றிலும் அறியவில்லை என்றும் கூறமுடியாது.

ஒரு நாள் ஜங்கி நதித்துறையில் ஒரு படகில் ஏறியமர்ந்து வெறுப்பு மிக்க உள்ளத்துடன் மௌனமாக உட்கார்ந்து நீரோட்டத்தையே நோக்கிக் கொண்டிருந்தான். அப்போது அவன் கண்கள் இரண்டிலிருந்தும் தாரை தாரையாகக் கண்ணீர் ஒழுகிக் கொண்டிருந்தது. அச்சமயம் கிராமத்தின் பக்கத்திலிருந்து டாலிமி இடுப்பில் குடத்தை வைத்துக் கொண்டு துறைக்கு வந்து, ஜங்கி இமை கொட்டாமல் நீரையே பார்த்துக் கொண்டிருப்பதைக் கண்டாள்.

டாலிமியின் உள்ளம் எப்போதுமே, மீரீ நங்கையர்களுக்கு இயல்பான கட்டற்ற எழுச்சியும் கேளிக்கை விளையாட்டு விருப்பமும் உடையதாயிருந்தது. எப்போதும் அவள் பேச்சில் கேலியும் குறும்பும் நிறைந்திருக்கும். இப்போதும் அவள் அம்முறையிலேயே இடுப்பிலிருந்த குடத்தை மெள்ளக் கீழே வைத்துவிட்டு, இரு கையையும் விரித்துக் கொண்டு ஜங்கியின் பின்னே சென்று அவன் கண்களைப் பொத்தினாள். ஜங்கி அவள்