பக்கம்:அப்பாத்துரையம் 31.pdf/76

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




மலைநாட்டு மங்கை

59

ஜங் : அங்கே பானேயி என்ற யுவதி என்னிடம் நேசம் கொண்டிருந்தாள்.

ஜங்கி இதைக் கூறி முடிக்குமுன் டாலிமியின் முகம் ஒளியிழந்து கருகிற்று. ஆனால் ஜங்கி அவள் முக மாற்றத்தின் இரகசியத்தை உணரவில்லை. அவள் வெளிக்குத் தன்னைச் சமாளித்துக் கொண்டு, 'பின்!' என்று மேலும் அவன் உரையாடலை ஊக்கினாள்.

ஜங் : பின், தான் என்னுடனேயே வர விரும்புவதாக அவள் : உறுதி கூறினாள். அவ்வாறே ஆணையும் இட்டாள். ஆனால் அவள் தாய் தந்தையர் நான் ஏழை என்பதையும், எனக்கு யாரும் எதுவும் கிடையாது என்பதையும் உணர்ந்து என்னை வெறுத்து வேறு ஓர் இளைஞனைக் கொண்டு அவளுக்கு மாப்பிள்ளை கழிக்கத் தொடங்கியிருக்கிறார்கள். யார் கண்டார்கள்! அனேகமாக, இதற்குள்ளேயே என் தலைவிதி என் வாழ்க்கை மீது தீவைத் திருக்கக் கூடும்!

டா : அவள் வேறு யாரையும் வரித்துக் கொண்டால், உன்னை வரிக்க வேறு யாரும் கிடைக்க மாட்டார்களா, என்ன?

ஜங் : அவளைப் போன்றவர்கள் யாரும் இருப்பதாக எனக்குத்தோன்றவில்லை.

அந்தோ, ஜங்கீ ! சூதுவாது தெரியாத மீg இளைஞனே! என்ன சர்வநாசம் பண்ணிவிட்டாய்! ஒருத்தி வகையில் ஏற்பட்ட உன் உள்ளத்தின் நிலைமையை இவ்வளவு அப்பட்டமாகக் கூறிவிட்டாயே, அப்படிக் கூறியதனால் இன்னொரு உ உள்ளத்தில் எவ்வளவு நெஞ்சைப் பிளக்கும் வேதனையை உண்டுபண்ணி விட்டாய் என்பதை நீ அறிவாயா? ஆனால் என் செய்வது! உன் கபடமற்ற இளமை அப்படிப்பட்டது. நாகரிக மனித சமுதாயத்தின் மொழிக்குரிய வக்கிரமான போக்குகளின் இரகசியத்தை நீ அறியமாட்டாய். உன்னுடைய எளிய மனத்துக்குப் பட்டது எதுவோ, அதையே சொல்லி விடுகிறாய்!

எப்படியானாலும் உன்னால் எவருக்கும் செய்யக் கூடிய ஒரே துன்பத்தை நீ செய்து விட்டாய்! இனி அதற்கு நிவாரண மார்க்கம் எதுவும் கிடையாது.