இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
மலைநாட்டு மங்கை
69
வெளியே சென்ற பானேயி திரும்பிவர நேரமான தறிந்த கிழவன் தாமேதும் கிழவி நிரமாவும் கிராமத்தில் எங்கும் சென்று அவளைப் பற்றி ஊராரிடம் விசாரிக்கத் தொடங்கினார்கள். இதனால் ஊர் முழுவதும் கூச்சலும் குழப்பமும் ஏற்பட்டன. மக்கள் நால்வழிகளிலும் தேடப் புறப்பட்டார்கள். ஆனால் பானேயியின் தடத்தை எங்கும் காணவில்லை.