பக்கம்:அப்பாத்துரையம் 31.pdf/88

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




மலைநாட்டு மங்கை

71

சோவன்ஷீரீ கிராமத்து மீரீ மக்கள் பானேயியைத் தேடி மற்றக் கிராமங்களுக்கும் சென்றனர். கூணாசூந்தி கிராமத்துக்கும் சென்றார்கள். ஓரிடத்திலும் பானேயியைப் பற்றிய செய்தி கிடைக்க வில்லை. ஆனாலும் ஒரு செய்தி இதற்குள் அவர்களுக்குக் கிட்டிவிட்டது. ஜங்கியும் இப்போது கூணாசூந்தி கிராமத்தில் இல்லை. ஜங்கியே இந்தக் காரியத்துக்கு மூலபுருசன் என்பது இதனால் தெளிவாயிற்று. மேலும் ஏழு எட்டு நாட்கள் தேடிப் பானேயி பற்றிய புலம் எதுவும் கிட்டாது போகவே, அவர்கள் அவளை மீட்க முடியும் என்ற நம்பிக்கையையே கைவிட்டு

விட்டார்கள்.

ஜங்கி, தான் சேர்த்திருந்த ரூபாய்களின் உதவியாலும் நல்ல உள்ளம் படைத்த டாலிமியின் துணையாலும், நாள்தோறும் மாலை வேளைக்குக் கிராமத்துக்குச் சென்று அரிசி, உப்பு, எண்ணெய் முதலிய வாழ்க்கைப் பொருள்கள் வாங்கி வந்து, கிட்டத்தட்ட ஒரு மாத காலம் காட்டிலேயே இருந்து கழித்தான். ஜங்கியும் பானேயியும் தம்மைக் கடவுளே ஜோடியாகப் படைத்திருந்தார் என்றும், கார்சிங் - கார்ட்டான் சாட்சியாகத் தம் காதலுறுதி செய்யப்பட்டதால், அம் முறையில் சதி பதிகளாகி விட்டதாகவும் எண்ணி மகிழ்ச்சி அடைந்தார்கள். தாய் தந்தையரால் கைப்பிடித்துக் கொடுக்கப்படா விட்டாலும்கூட, இக் காரணங்களால் ஜங்கியே தனது வீட்டுத் தலைவன், தன் இயல்பான கணவன் என்றும் அவள் உறுதியாக நம்பினாள். அவள் அன்பு முழுமைக்கும் ஜங்கி பாத்திரமாய் இருந்தான். இதனால் வீட்டுக்கு மட்டுமன்றி, வஞ்சனை, சூதுக்கு இடமில்லாத அந்த மீரீ நங்கையின் உள்ளத்துக்கும் அவன் தலைவனானான்.

அதிகமாக வாய் திறந்து பேசியறியாத சரள உள்ளம் படைத்த மீரீ நங்கை தன் உள்ளத்தையும் உயிரையும் பாச பந்தங்களையும் ஜங்கியின் காலடியிலேயே வைத்துக்

ம்

கவலையற்றிருந்தாள்.

மாதம் ஒன்று கழிந்தது.

ஏதாவது தீவுகளிலிருந்த மீரீ கிராமத்திலோ அல்லது கேர்க்கடியா அல்லது மாச்ச கோவாப் பகுதிகளுக்கோ சென்று அங்குள்ள மக்களுடன் இணைந்து வாழலாம் என்று அவர்கள்