பக்கம்:அப்பாத்துரையம் 36.pdf/139

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(122) ||.

அப்பாத்துரையம் - 36

அவற்றின் உதவியால் அவர்கள் வானில் பறந்து சென்றனர்.

ளைஞனாகிய இக்காரஸ் இப்புதிய ஆற்றலால் மிகுதி கிளர்ச்சி பெற்று முகில் கடந்து பறந்தான். வெங்கதிரவன் ஒளி முழு வேகத்துடன் இறக்கைகளைத் தாக்கியதால் மெழுகு இளகிற்று. இறக்கைள் சிதைந்து அவன் கடலில் வீழ்ந்து இறந்தான். டேடலஸ் மட்டும் கடல் கடந்து அயல்நாடு சென்று, மகன் முடிவால் எச்சரிக்கையடைந்து, தன் கலைத் திறத்தைப் பணிவுடன் பயன்படுத்தி வாழ்ந்தான்.

தீஸியஸ் தன் வெற்றியால் செருக்கடைந்து பல இன்னல்களை வருவித்துக் கொண்டான். அரியட்னே போன்ற அறிவுடைய வெளிநாட்டுப் பெண்ணுடன் வாழ அவன் மனம் இடந்தரவில்லை. வழியில் அவர்கள் ஒரு தீவில் தண்ணீர் குடிக்க இறங்கினார்கள். அரியட்னே இளைப்பாறும் சமயம் தீஸியஸ் அவளை விட்டுவிட்டு வந்து விட்டான். அத்துடன் தந்தைக்கு அவன் கூறிய உறுதியை அவன் மறந்துவிட்டான். கப்பலில் வெள்ளைக் கொடிக்கு மாறாகக் கருங்கொடியே திரும்பி வரும் போதும் பறந்தது. கப்பல் தொலைவில் கடலில் வரும்போதே கரையிலிருந்து ஈஜியஸ் கருங்கொடியைக் கண்டான். கப்பல் கரைவரும் வரை காத்திராமல், மகன் இறந்துவிட்டான் என்ற வருத்தத்தால் அவன் உயிர் நீத்தான்.

காதலியைத் துறந்த பழி தந்தை உயிரைக் கொண்டதே என்று தீஸியஸ் கலங்கினான்.

தீஸியஸ் வாழ்க்கையின் தொடக்க வீரம் அவன் வாழ்நாள் முழுதும் தொடர்ந்திருந்தது. அவன் தொடக்கப் பிழைகள் அவன் உள்ளத்தில் ஆழ்ந்தமைந்து செய்லாற்றும் அமைதியையும், அநீதி செய்ய அஞ்சும் தன்னடக்கத்தையும் வளர்த்தன. வீரச் செயல்கள் பல புரிந்து, நாட்டில் நல்ல சட்டதிட்டங்கள் வகுத்து, அவன் அதேன்ஸின் புகழைக் கிரேக்க உலகெங்கும் அதற்கு அப்பாலும் பரப்பினான்.

தொலை கிழக்கு நாடாகிய தமிழகத்தில் அன்று வீரமிக்க பெண்டிரே ஆட்சி செய்த பகுதி ஒன்று இருந்தது. அதனைக் கிரேக்கர், பெண்கள் நாடு என்று கூறினர். அந்நாடுவரை தீஸியஸ் தன் வாள்வலியைக் கொண்டு சென்றான். ஆனால்,