பக்கம்:அப்பாத்துரையம் 36.pdf/186

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறுவர்க் கதைக் களஞ்சியம் - 5

169

"உங்கள் இன்னுயிர்ப் பாவையை என் இன்னுயிர்ப் பாவை ஆக்கினால் போதும்" என்றான் பெர்ஸியஸ்.

பெண்ணின் விருப்பமறிய அரசன் அவளை நோக்கினான்.

அண்ட்ரோமீடா தாயைக் கட்டிக்கொண்டு “உங்களை விட்டு நான் எப்படிப் பிரிந்து செல்வேன்?" என்று

கண்கலங்கினாள்.

மீடாவின்

களிக்க

இருவர் குறிப்புமறிந்த தாய் தந்தையர் பெர்ஸியஸுடன் அண்ட்ரோ திருமணத்தை நாடு ஆரவாரத்துடன் நடத்தினர்.

சிலநாள் மனவிையின் நகரில் இருந்தபின் அண்ட்ரோ மீடாவுடன் பெர்ஸியஸ் ஸெரிஃவ்ஸ் தீவுக்குப் புறப்பட்டான். மெடூசாவின் தலையடங்கிய பை அவன் கையில் எப்போதும் தொங்கிற்று.

அதேனாவின் கோயிலில்கூட பாலிடெக்டிஸின் தொல்லை தானேயை விடவில்லை. அவன் அவளிடம் தன் ஒற்றர்களை அனுப்பியும் தூதர்களை அனுப்பியும் நச்சரித்தான். எதற்கும் அவள் அசையாதது கண்டு,அவன் அதேனாவின் கோயிலென்றும் பாராமல் படைவீரரை அனுப்பி, அவளை வலுக்கட்டாயமாகத் தூக்கிவர உத்தரவிட்டான். படைவீரர்களைக் கண்டு, தானே துடிதுடித்தாள்.

பெர்ஸியஸ் இந்தச் சமயத்தில் திடுமென வந்து சேர்ந்தான். தாயைக் கைப்பற்றத் துணிந்து படைவீரர் நின்ற காட்சி கண்டு அவன் குருதி கொதித்தது. ஆனால், படை வீரரைப் பின்பற்றி வந்த பாலிடெக்டிஸ் பெர்ஸியஸைக் கண்டு வியப்பும் சீற்றமும் கொண்டான். அவனைப் பிடித்துக் கொல்லும்படி அவன் தன் படைவீரர்க்கு ஆணையிட்டான். பெர்ஸியஸால் இன்னும் பொறுமையாக இருக்க முடியவில்லை. அவன் பையிலிருந்து மெடூசாவின் தலையை எடுத்து அனைவர் முன்பும் நீட்டினான். நீட்டினான். எல்லா எல்லாரும் கல்லாய் விட்டனர்.

பாலிடெக்டிஸும் அவர்களில் ஒருவரானான்.

தாயை மீட்டுக் கொண்டு பெர்ஸியஸ் மனைவியுடன் ஆர்கஸுக்குப் புறப்பட்டுச் சென்றான். போகுமுன் டிக்டிஸை அவன் ஸெரிஃவஸின் அரசனாக முடி சூட்டினான்.