(306) ||
அப்பாத்துரையம் - 36
ஆனால், நகர்க்காவலர் அவனை அறிந்திருந்தனர். உள்ளே சென்றால் மீட்டும் தொல்லைகள் எதிலாவது மாட்டிக் கொள்ள நேரும். ஆகவே உருமாறிச் சென்றால் தான் நல்லது என்று அவன் எண்ணினான். அலைந்து திரியும் ஆண்டியுருவில் அவன் நகரத்துக்குள் சென்று மகீமன்ஃசாரை தேடித் திரிந்தான்.
ஆனால், மகீமன்ஃசாரைத் தேடி அலெப்போ நகரில் திரிந்தது அவன் மட்டுமல்ல. வேறும் ஒருவர். அதே வேலையில் அவனை விடப் பன்மடங்கு ஆர்வத்துடன் ஈடுபட்டிருந்ததுண்டு. அது வேறுயாருமல்ல. இளவரசியை மணம் செய்யக் காத்தருந்த தஃபரீஃசு இளவரசன் மீர் அசாரே.
இளவரசி காணமற்போன இரவு கழிந்து விடியற் காலமானதே உரூம் நகர் முழுதும் அல்லோகல்லோலப் பட்டது. காவலரும் படைவீரரும் நாலா திசைகளிலும் சென்று இளவரசியைத் தேடினர். தாய்தந்தையர் மட்டுமன்றி நாட்டு மக்களும் ஆறாத்துயரில் ஆழ்ந்தனர்.
ஆனால், அனைவர் துயரினும் மிக்க அருந்துயர் உழந்தவன் மீர் அசாரே. முதல் அதிர்ச்சி கழிந்ததும் அவன் எழுந்தான். "மற்றவர்களைப் போல நானும் இருந்து வருந்துதல் தவறு. நானே நேரில் சென்று தேடி என் உரிமைக் காதலியை மீட்டுவருவேன்," என்று கூறிப் புறப்பட்டான்.
பல்நாள் பாலைவனங்களும் சோலைவனங்களும், காடும் நாடும் தேடி, அவன் இறுதியில் அலெப்போ நகருக்கு வந்தான்.
வழியில் இளவரசன் காய்கனிகளையும் நீரையுமே உண்டு நடந்தான். அத்துடன் அவ்வப்போது காடுகளில் விலங்குகளை வேட்டையாடிச் சருகுத் தீயில் வேகவைத்தும் உண்டான். அலெப்போவை அடுத்த காட்டில் அவன் ஒரு பகுதியை உண்டு, மீந்ததைச் சிப்பமாகக் கட்டி எடுத்துக் கொண்டு வந்தான்.
நகரின் அவன் ஓர் ஆண்டியைக் கண்டதும் அவனுடன் பழகி நட்பாடினான். இருவருமாக நகரின் ஒதுங்கிய பகுதியிலிருந்து சிப்பத்திலிருந்த இறைச்சியை உண்டு சிறிது இளைப்பாறினர்.
ண்டி உண்மையில் ஆண்டியல்ல. மகீமன்ஃசாரை ஆண்டியுருவில் தேடிக்கொண்டிருந்த திருடன் அக்தாரே.