சேக்சுபியர் கதைகள் - 4
4
119
மன்னன் அதற்குள் முடியைக் கவர அவன் விரைந்தான் என்றெண்ணி ஐயமும் சினமும் கொண்டான். பின் அவன் ஹென்ரி இளவரசன் சொற்களால் உண்மை யுணர்ந்து மகிழ்வுடன் உயிர்நீத்தான்.
இளவரசன் ஹென்ரி தன் முன்னைக் குணம் மறந்து புது மனிதனாய் இங்கிலாந்தின் ஒப்பற்ற அரசனானான். நற்குணமுடையவனாயினும், அரசனைத் தன் வழியிலிருக்க முயன்ற ஃபால்ஃடாப்ஃப் கூட்டத்தினர் புறக்கணிக்கப்பட்டனர். அவர்களை
இளவரசனுடன்
சட்டப்படி தண்டித்த ஸர்ஹென்ரிகாஸ்காயின் என்ற தண்டத்தலைவன் நன்கு மதித்துப் போற்றப் பட்டான்.
1. துணைக்கருவிகளே பகைக்கருவிகளானது
பிறப்புரிமையால் அரசராகாது குடிகள் இணக்கம் பெற்று அரசிருக்கை ஏறிய ஆங்கில மன்னருள்' நான்காம் ஹென்ரி அரசன் ஒருவன்.
அவனுக்குமுன் ஆண்ட2 இரண்டாம் ரிச்சர்டு மன்னனுக்கு அவன் சிற்றப்பன் மகன். ஆனால், அவன் தந்தைக்கும் மூத்தவனான இன்னொரு சிற்றப்பனுடைய மகன் ஒருவன் இருந்தான். அவன் பெயர்3 எட்மன்டு மார்டிமர். அரசுரிமை ஒழுங்குப்படி அவனே அரசனாய் வந்திருக்க வேண்டும். ஆனால், ரிச்சர்டின் தன்னாண்மை ஆட்சியைப் பெருமக்கள் எதிர்த்தபோது, ஹென்ரிதான் அவர்களுக்குத் தலைமை பூண்டான். எனவே, ரிச்சர்டு முடி துறந்தபோது அவனே அப்பெருமக்களின் இணக்கத்தாலும் துணையாலும் தன்னை அரசனாக்கிக் கொள்ள முடிந்தது.
தன்னலத்தின் வயப்பட்டு ரிச்சர்டின் போக்கைக் கண்டித்தே ஹென்ரி அரசனானான். ஆயினும் அங்ஙனம் அரசனானபின் அவனும் அந்த ரிச்சர்டைப் போலவே, தன்னாண்மையுடன் அரசாளத் தொடங்கினான். அப்போது பெருமக்கள், ரிச்சர்டை வெறுத்தததைவிட மிகுதியாக அவனை வெறுக்கத் தொடங்கினர். “ரிச்சர்டாவது முறைப்படி அரசனாயிருந்தவன்; அப்படியல்லனே இவன்; இவன் மணிமுடி நம் கைப்படக் கொடுத்த கொடைதானே; இவனுக்கென்ன இத்தனை தன்னாண்மை?” என்று அவர்கள் சீறினர்.