140
||-.
அப்பாத்துரையம் - 38
கோரிப் பேசினான். ஹாட்ஸ்பர் அவனிடம் சீற்றத்துடன். "நார்தம் பர்லந்துக் குடி. நும் அரசருக்கு முடியளித்ததற்கு அவர் காட்டிய நன்றி போதும். அப்போதவதறித்த வாக்குறுதிகள் என்னவாயின என்றறிந்த பிறகு அவர் வாக்குறுதியை இன்னும் ஏற்கத்தக்க பித்தராயில்லை நாங்கள்" என்று கூறியனுப்ப இருந்தான். ஆனால் 2வொர்ஸ்டர் முதலிய பிற தலைவர்கள் அவ்வளவு திமிராய்ப் பேசவேண்டாம் என்றதன்மேல், அவர்களையே அரசனிடம் அனுப்பி ஒப்பந்தம் செய்ய ஏற்றான்.
மறுநாள் கீழ்வான் குருதி கக்கி நிற்கும் நேரத்தில் கிளர்ச்சிக்காரரது படை வீட்டினின்று வொர்ஸ்டரும் 3வெர்னனும் அரசன் படைவீட்டிற்குச் சென்றனர். அரசன் முன்னும் நார்தம்பர்லந்துக் குடியின் பழங்குறைகள் படிக்கப்பட்டன. அரசன் அவற்றை ஆராய்ந்து வேண்டுவன செய்வதாகவும் போர் நிறுத்தும் கிளர்ச்சிக்காரர் குற்றங்களைத் தண்டனையின்றி மன்னிப்பாதாகவும் வாக்களித்தான். அரசன் பக்கத்தில் நின்ற இளவரசன் மட்டும் குறும்பாக, "இவற்றை ஏற்காவிடில் இருபுறத்தும் நாட்டுக்குடிகள் வீணில் போர் செய்து அழிவதைவிட உம் பக்கத்தலைவனான ஹாட்ஸ்பர் என்னுடன் தனிச் சண்டைக்கு வரும்படி கூறுங்கள். அவன் வருவதாயின் அதன்மூலம் வெற்றி தோல்விகளை எளிதில் வரையறுத்து விடலாம்” என்றான்.
இளவரசன் வாக்கு விளையாட்டானது என்றறிந்து வெர்னன் அரசனது வாக்கை நம்பிக்கையாக, ஏற்பதென்றே முடிவுகொண்டான். ஆனால், வொர்ஸ்டருக்கு அரசன் வாக்குப் பிடிக்கவில்லை. வன்மையுள்ள ஹாட்ஸ்பர், நார்தம்பர்லந்து முதலியவர்களுக்குக் கொடுக்கப்படும் மன்னிப்பு. வலிகுன்றிய ஆனால், தீமையில் முந்திக்கொண்ட தன்போல்பவருக்குக் கொடுக்கப்படாதென்று அவன் நினைத்தான். ஆகவே, அரசன் காரியம் கைகூடும்வரை பசப்புமொழி பகர்வானென்றும் ஆதலின் அவன் சொல்லை நம்பி அப்படியே போய்ச் சொல்ல வேண்டாம் என்றும், எதிரிகள் அப்படியே போய்விட்டால் மன்னிக்க மட்டும் அரசன் ஒருப்படுவதாகக் கூறவேண்டும் என்றும் வெர்னனிடம் வற்புறுத்தினான். மேலும், “இறவரசன் ஹாட்ஸ்பருக்குத் தந்த போரழைப்பையும் அழுத்தந்திருத்தமாக எடுத்துரைக்க வேண்டும்" என்றான்.