சேக்சுபியர் கதைகள் - 4
141
இதன் பயனாகக் கிளர்ச்சிக்காரரும் போர்செய்வதென்று தீர்மானஞ்செய்தனர்.
6 ஷுருஸ்பரிப் போர்
ளவரசனது போரழைப்புக் கேட்ட ஹாட்ஸ்பர் மதயானையின் முழக்கங்கேட்ட வேங்கையென்னச் சீறிப் பாய்ந்தான்.
அன்று ஷுருஸ்பரியில் நடந்த அப்போரில் முதலில் வெற்றி கிளர்ச்சிக்காரர் பக்கமாகவே தோன்றிற்று. அரசன் படைகள் எவ்வளவு பயிற்சி பெற்றவையாயிருப்பினும், டக்ளஸினுடைய ஸ்காட்லந்துப் படையின் தாக்குதலுக்கு முன் நிற்கமாட்டாமல் பின்னடையத் தொடங்கின. அதேசமயம் கிளர்ச்சிக்காரர் பக்கத்துள்ள மார்டிமரின் ளேவல்ஸ் நாட்டு வில்லாளிகள் கூரிய அம்புகளால் படையின் பக்கங்களைத் துளைத்தனர். டக்ளஸ் தன் ஒப்பற்ற குதிரை மீதேறி வலசாரி இடசாரியாகச் சுழன்று கைவாளால் எதிரியின் அம்புகளைத் தடிந்து, எதிரிகளையும் அவர்கள் குதிரைகளையும் தட்டின்றிவெட்டி வீழ்த்தினான். ஆயினும், இவற்றால் மனநிறைவு அடையாமல் எப்படியாவது அரசனைக் கண்டுபிடித்து அவனை அழிக்கவேண்டும் என அவன் வந்தான்.
அரசன் உயிர் போரில் மிகவும் விலையேறியதாதலின் ளவரசன ஏற்பாட்டின்படி, அரசனுடை அணிந்து அரசன்போல் நடிப்பவர் பலர், படையின் பல பகுதிகளில் நிறுத்தப்பட்டனர். அவர்களின் ஒருவன் ஃபால்ஸ்டாஃப் டக்ளஸ். அவனைத் தொலைவில் கண்டு அரசன் என்று மனத்துட்கொண்டு அவனை நோக்கி வந்தான். அதுகண்ட ஃபால்ஸ்டாஃப் குதிரையை விட்டிறங்கிச் சரேலென்று மண்ணில் கிடையாய் வீழ்ந்துகிடந்து, செத்தவன்போல் நடித்தான். அவன் உருவாலும் நடிப்பாலும் அவன் அரசனல்லன் என்று கண்டு டக்ளஸ் அவனை விட்டுவிட்டுப் பின்னும் அரசனையே நாடிச் சென்றான்.
டக்ளஸால் நிலைகுலைந்து வரும் மன்னன் படைப்பக்கம் இளவரசன் தனது உணர்ச்சி மிக்க படையுடன் வந்து தாக்கி எதிரியைப் பின்வாங்கச் செய்து வீரரை ஊக்கினான். அன்றைய