142
அப்பாத்துரையம் - 38
போரில் அவன் மூக்கில் ஆழமாக ஓர் அம்பு பாய்ந்தது. அதனையெடுத்து மருந்திட்டபின் அவன் மருத்துவர் அறிவுரையைக் கூடக் கேட்காது மீண்டும் போர்க்குப் பாய்ந்தெழுந்தான்.
இறுதியில் அவன் ஃபால்ஸ்டாஃப் கீழே விழுந்து போர்த் தடுமாற்றங்களுக் கிடையில் எழுந்திருக்க முடியாமல் கிடக்கும் பக்கமாகப் படைகளைப் பிளந்துகொண்டு செல்கையில் நேருக்கு நேராகத் தான் எதிர்க்க விரும்பிய பகைவனாகிய ஹாட்ஸ்பரைக் கண்ணுற்றான்.
இருவருக்கும் தம் நான்-மாளாப் புகழோ மாள்வோ வந்தெய்தும் நாள்-வந்தெனத் தெற்றென விளங்கிற்று இனியும் உலகில் இவ்விரு ஞாயிறுகளும் எழுந்து ஒளிவீச முடியாது. ஒருவர்க்குத்தான் இவ்வுலகில் இடமுண்டு என்பதை இருவரும் அறிந்தனர். இருவரும் பாயப்பதுங்கும் புலிகள்போல் சற்றே பின்வாங்கிப் பின் ஒருவர் மேல் ஒருவர் சீறி விழுந்தனர். முதலில் ஈட்டியுடன் ஈட்டி மோதின. அவை முறிந்தபின் வாளொடுவாள் பொருதன. பின் மீண்டும் குதிரை மீதேறி ஒருவர் மீதொருவர் சாடினர். ஹாட்ஸ்பர், இளவரசன் குதிரையை மூன்றுதரம் வீழ்த்தினான். இளவரசன், ஹாட்ஸ்பரின் தலையணியைப் பலகால் உதைத்தான். இருவர் உயிரும் உடலும் உரம் பெற்றவைபோல் தோன்றின. அடிக்கடி இருதிறத்தார் கவனத்தையும் பிரிக்க அவர்களுடைய எதிரிகள் முயன்றனர். ஆயின் புலியேற்றையும் சிங்கவேற்றையும் எதிர்க்கவல்லது பிற ஏறாகுமோ! அவர்கள் தமக்குத்தாமே இணையாய்-நெடுநேரம் நின்று பொருதனர்.
அவ்விருவர்
குணவேற்றுமைகளும்
அவர்கள் போர்முறையில் விளங்கின. ஹாட்ஸ்பர் மதயானைபோல் பொங்கி எழுவான். பாம்புபோல் சீறுவான்; புலிபோல் வெறித்த நோக்குடன் வாளுந் தானுமாய் இளவரசனை நோக்கிப் பாய்வான். ஆனால், ளவரசனோ தன் நிலை குலையாது. வைத்தகால் பின் வாங்காது நின்று எதிரி வன்மை குறைந்தவுடன் பரபரவென்று சிலந்தி த வலையிலகப்பட்ட பூச்சியைச் சுற்றுவது போலச் சுற்றி அவன் உடல் முற்றும் வாளால் சல்லடை சல்லடையாகத் துளைத்தான். இறுதியில்