பக்கம்:அப்பாத்துரையம் 38.pdf/183

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




158

அப்பாத்துரையம் - 38

என்று கூறி உலக வாழ்வினின்றும் விடைகொண்டான்.

இளவரசன் மூன்று நாள் அரசனின் மணிமுடியைக் கையிலேந்தி ஊணுறக்கம் துறந்து தந்தையை நினைந்து நினைந்து அழுதான். பின்தம்பியும் பெருநில மக்களும் தேற்றத்தேறி அரசுரிமை கொள்ளலானான்.

அவன் குடிகளைப் பார்வையிட்டு முடியணியப் போகும் ஊர்வலத்தில் அவனைக் காண ஃபால்ஸ்டாஃபும் அவன் கூட்டத்தினரும் வழியில் காத்து நின்றனர்.ஃபால்ஸ்டாஃப் தன் ஹால் அரசனாகிவிட்டான் என்று கேட்டவுடன் தன் நண்பர்களிடமெல்லாம் ஆரவாரத்துடன் உனக்கு அது தருவேன், உனக்கு இது தருவேன் எனப் பொன்னும் மணியும் பணியும் உரிமையும் வாயார வழங்கினான். அவையனைத்தை யும் ஒருநொடியில் நிறைவேற்றி வைக்க அவன் காத்திருந்தான்.

ளவரசன் முன்னம் போர்க்கெழும்போது ஃபால்ஸ் டாஃப் கூட்டத்தினர் செய்த திருட்டில் தொடர்பு வைத்ததாக அவனையும் சிறைப்படுத்தத் துணிந்த 'ஸர் ஹென்றி காஸ்காயின் என்ற வழக்குமன்றத் தலைவனும் அங்கே வந்து காத்திருந்தான். பாவம் அவனை ஃபால்ஸ்டாஃப் அச்சுறுத்தி உன் நாள் போயிற்று; இஃது என் நாள். உன் தண்டனையை ஏற்க வா” என்று இழுத்து வந்திருந்தான். அந்நடுநிலை ஒழுங்காளன் இறைவனை வணங்கி கையுடனும் பதைபதைக்கும் உடலுடனும் உலக நலனுக்காக வேண்டித் தூக்கிற்குப் போகக் காத்து நிற்கும் முனிமகன் போன்று நின்றான்.

மன்னனாய் ஐந்தாம் ஹென்ரியாகப் போகும் இளவரசன் தொலைவில் நின்றே ஃபால்ஸ்டாஃபைக் கண்டான். அவன் மனம் அன்பால் உருகிற்று. அவன் முகம் "வன்பினால்" கல்லுரு வன உறுதியுடன் காணப்பட்டது. அவன் ஃபால்ஸ்டாஃபை நோக்கிச் "சிறியோய், அரசர் நிலையுறப் போகும் தறுவாயில் இடையூறு செய்யற்க. அது நாட்டுப் பகைமைக் குற்றத்தின் பாற்படும், நின் வாழ்வு என்னளவில் செத்தது; நீ போகலாம்" என்றான்.

கயற்று

நகையரசு அரசிழந்தது; நகையிழந்தது; நகைய செயலற்றுத் தன் விடுதி சென்றது. ஹால் உன் பிரிவிற்கு

66