சேக்சுபியர் கதைகள் - 4
ய
159
வருந்துகிறேன். ஐந்தாம் ஹென்ரி, உன் வருகைக்கு மகிழ்கிறேன். என் இறந்தபோன ஹால், என்னுடன் மறு உலகில் வந்து வாழ்க! ஐந்தாம் ஹென்ரியும் அவன் சிறிய உலகும் இங்கேயே நிலைக்கட்டும்” என்று எழுதியனுப்பிவிட்டு அன்றே அவன் தன் மலையுடலை வைத்து மக்கள் மலைவடையச் செய்துவிட்டு ஆவி நீத்தான்.
இதையறித் புதிய மன்னன் ஐந்தாம் ஹென்ரி இன்பமும் துன்பமும், இறும்பூதும், இளிவரலும் ஒருங்கே அடைந்தான். அவன் நகையரசன் உயிர்க்கு உறுதிதர இறைவனை
வணங்கினான்.
வழக்கு மன்றத் தலைவனை முதலில் முனிவால் உறுக்கி அதன் உயர்வை உலகறியக் காட்டியபின் அவனை உச்சிமேற்கொண்டு பாராட்டி உரிமைகளும் பட்டங்களும் வழங்கித் தன் அரசவையில் ஓர் உறுப்பினனாக்கிக்
கொண்டான்.
நான்காம்
ஹென்ரியின் தீவினைக்கு முற்றிலும் ஆளாகாமல் நல்லெண்ணமும் நன்மனமும், நன்முயற்சியும் கொண்டு ஐந்தாம் ஹென்ரி அரசிருக்கையேறி நான்காம் ஹென்ரி அரசனுக்கு நற்புகழ் ஈந்தான்.