பக்கம்:அப்பாத்துரையம் 38.pdf/196

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சேக்சுபியர் கதைகள் - 4

171

வீசி எறிந்தான். இவற்றுள் ஒன்றால் ஜான் சமய வினைகள் அனைத்தினின்றும் விலக்கப்பட்டான். அதனையும் அவன் சட்டை செய்யாதிருக்கவே இரண்டாவது 2ஆணையால் ஜான் ஆளும் நாட்டையே சமய வினைகளினின்றும் விலக்கி வைத்தான். இதன் கொடுமை மக்களனை வரையும் தாக்கியது. பிறந்த பிள்ளைக்குப் பெயரிடவும். இறந்தவரை நன்முறையில் அடக்கவும் செய்யவும், மணமக்களை மணவினையால் பிணைத்து வைக்கவும் 3சமயத் தலைவரும் 4சமய வினைஞரும் மறுத்தனர்.

இவ்விரு பேராணைகளாலும் எதிர்பார்க்கப்பட்ட பயன் ஏற்படவில்லை. சமயத்தின் திருவுருப் போன்ற சமயத்தலைவர் மீது சீற்றங்கொண்ட ஜானுக்குச் சமயவிலக்கு ஒரு பொருட்டாகத் தோன்றாதது இயல்பே. ஆனால் இரண்டாவது ஆணை நாட்டுமக்கள் அனைவரையும் தாக்குவதனால் அதனால் பெரும்பயன் ஏற்படும் எனத் திருப்பெருந் தந்தை எதிர்பார்த்தார். ஓரளவு அதனால் ஆங்கிலேயர்-சிறப்பாகச் சமயப் பற்றுமிக்கார்- மன அமைதி குலைந்தனர் என்பதில் ஐயமில்லை. ஆனால், சமயத்தின் பேரால் வெளி நாட்டான் ஒருவன்-அது திருப்பெருந் தந்தையாயிருந்தாலும் கூட-தம் அரசனை-அவன் எவ்வளவு கெட்டவனாயிருப்பினுங்கூட அடக்கியாள அவர்கள் ஒருப்படவில்லை. எத்தனையோ வகைகளில் அனுக்கு மாறாயிருந்த பல்வகை ஆங்கில அரசியல் கட்சியினரும் திருப்பெருந் தந்தையை எதிர்க்கும் ஓர் இடத்தில் மட்டும் அவனுக்கு மனமாரத் துணை தந்தனர். இக்காரணத்தால் திருப்பெருந்தந்தையின் இரண்டாவது ஆணையை அவர்கள் பொறுத்து எதிர்த்தனர்.

ஆற்றல் மிக்கார் பெருந்தோல்விகளால் வீறெய்துவரேயன்றி மலைவதில்லை. ஜானேயன்றி நாட்டு மக்களும்கூடத் தன்னை அசட்டை செய்கிறார்கள் என்று கண்ட திருப்பெருந்தந்தை சூரபன்மனுடைய மாயத்தோற்றங்களால் ஒரு சிறிதும்கலங்காது கைவேலெறிந்த முருகவேள் போன்று தன் முழு ஆற்றலையும் செலுத்துவதென்று துணிந்து ஜானை அவனது அரசிருக்கையி னின்றும் நீக்கினான். இதனை முதலிரு ஆணை களையும்போல் சொல்லளவிற் செய்தால் பயனில்லை என்று கண்டு அதனை நிறைவேற்றி வைக்கும்படி ஃபிலிப்புக்கு ஆணை தந்தான்.