174
அப்பாத்துரையம் - 38
சிலநாட்கள் சென்றபின் இங்ஙனம் குறிப்பாகக் கூறிய செய்தி வெளிப்படையாக ஆணையுருவில் தரப்பட்டது.
66
"வியூபெர்ட்! என் மனத்தில் இருக்கும் எண்ணத்தை நீ அறிவாய்; பல தடவை நீ அதனை அறிந்து நடப்பதாயும் குறிப்பாய் ஏற்றுக் கொண்டிருக்கிறாய். அதனை நிறைவேற்றும் காலம் வந்தது.
“நீ பல கொலைகளைக் கூசாது செய்தவனாயினும் இன்று இவ்வொன்றிற்குத் தயங்குகிறாய். சரி, இப்போது நான் சொல்லுகிறபடி செய். கொலை வேண்டா. பழுக்கக் காய்ச்சிய இரும்புக் கம்பிகளால் அவன் இரு கண்களையும் அவித்துவிடு. ரு 'இதனைச் செய்யத் தவறின் நீ என் நண்பனில்லை; என் மாறாப் பகைவன்”.
8. பணஞ் செய்யும் படுமோசம்
இவ்வாணையை மீற வகையில்லாது ஹியூபெர்ட்
விழித்தான்.
66
“இதுவரையில் எத்தனையோ கொலைகளும் துணிகரச் செய்லகளும் செய்து அரசன் அன்பையும் அதன் பயனாகிய உயர் நிலையையும் பெற்றோம். இனி ஒவ்வொரு செயலால் அவற்றை விட்டு விடுவதா? இவ்வொன்றைச் செய்துவிட்டால் -இதுவே அவனுக்கு எல்லாவற்றினும் உயர்நிலையான செய்தி- வ்வொன்றைச் செய்துவிட்டால், பின் இதை வைத்துக் கொண்டு அவனை எப்படி வைத்தாட்டப்படாது? அப்போது அவன் என்ன கேட்டால் தரமாட்டான்?
66
உ
“ஆனால், ஆனால்-ஈசனே அப்பிள்ளை முகம் ஞாயிற்றின் ஒளியும், திங்களின் குளிர்ச்சியும், விண்மீன்களின் தனிமையும், மின்மினியின் நெய்மையும் கொண்ட அவன் முகம்-அன்றலர்ந்த செந்தாமரையினை நாணச் செய்யும் அவன் புன்முறுவல் பூத்த முகம்-என்னை என் அம்மாவிடம் என் சிற்றப்பா எப்பாது அனுப்புவார். என்னை எல்லாரும் எடுத்து முத்தி மோந்து மகிழ்கிறார்களே. என் சிற்றப்பா மட்டும் என்ன என்னைக் கண்டு முகத்தைக் கோண வைத்துக்கொண்டே நிற்கிறார்; நான் அப்பா என்றால் சட்டென்று சீறிவிழுகிறார்; 'ஏன் மாமா, நீ என்னை