பக்கம்:அப்பாத்துரையம் 38.pdf/224

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சேக்சுபியர் கதைகள் - 4

199

இனி அவனிடம் மன்றாடிப் பயனில்லை என்று கண்டு மக்கள் மீண்டேகினர்.

தாம் செய்த தீவினை தம்மையும் கெடுத்துத் தம் நகர் விளக்கமாயிருந்த வள்ளலையும் பேயுருவாக்கிற்று என்று மீளாத் துயருற்று மாழ்கினர் அதேனியர். அல்சிபியாதிஸே இறுதியில் அவர்கள் நிலை கண்டிரங்கி நகரைக் கொள்ளை யடித்தலை நிறுத்தும்வரை அவர்களின் பதைபதைப்பு நீங்கவில்லை.நன்றி கொன்றார்க்கு இம்மையிலும் மறுமையிலும் மீட்பு அரிதன்றோ?

“எந்நன்றி கொன்றார்க்கும உய்வுண்டாம் உய்வில்லை செய்ந்நன்றி கொன்ற மகற்கு".