பக்கம்:அப்பாத்துரையம் 38.pdf/233

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




(208

அப்பாத்துரையம் - 38

மணங்களும் எங்கணும் இனிமையைக் கொழித்த அந்த வேளையில், அவனது நெடிய உயிர்ப்பு மட்டும் வெம்மையைக் கான்று நின்றது. அவன் தன் உளமாகிய நிலப்பரப்பில் தன் எழிலாரணங்கிற்கு மனக் கோட்டையாகிய மதில்களை எழுப்பிக் கோயில் கட்டிக் கொண்டே தன்னை மறந்து நடந்து கொண்டிருந்தான். அத்தறுவாயில் தொலைவில் யாரோ பூஞ்செடிகளை விலக்கிக் கொண்டு வரும் அரவங் கேட்டு மலர்ப்படுக்கை ஒன்றில் ஒதுங்கி ஒளிந்து கொண்டான்.

ஆங்கே அவன் ஒளிந்து கொண்டிருக்கும் இடத்தின் வழியாகவே வந்து கொண்டிருந்தான் அரசன். மண்மிசை விழுந்துகிடந்த நீலவானத்தின் துண்டமென்ன மாசு மறுவற்ற அவன் முகம் அன்று துன்பமும் அயர்ச்சியும் தூங்க மாசடைந்து கிடந்தது அவன் கண்கள், கையில் இருந்த ஒரு கடிதத்திலேயே ஊறிநின்று அதன் எழுத்துக்கள் சென்ற திக்கிலேயே வழுக்கிச் சென்றதாகத் தோன்றின. அவ்வெழுத்துக்களை அவன் தலையை யசைத்தும் கழுத்தை உயர்த்தியும் உரக்கப் பாடினான். “மென்பனி தீரிள ஞாயிறும் கண்பனி தீருனை ஒக்குமோ? வண்பனி நீரிலு லாவுறும்

தண்பனி மாமதி தானெங்கே?

என்பனி நீரும்நின் இந்நினை

வன்பினிற் கொண்டுசெல் ஊர்தியே!

வெண்பனித் தாள்சுமந் தேகுமென்

துன்பினைத் தூமொழி, காண்பையோ?”

66

இதைப் பாடியபின் பெருமூச்சு விட்டு இளவரசியின் உருவெளித் தோற்றத்தில் ஈடுபட்டவனாய், வா, வா, ஃபிரான்சின் தவப்பயனாய் வந்த என் பெண்ணணங்கே, உனக்காக உலந்து கிடக்கும் இவ்வுள்ளத் தடத்தில் உன் அன்பு மழையினைப் பொழிவாய்" என்றான்.

அவ்வமயம் பின்னால் நிழலாடக் கண்டு அவன் சட்டெனத் தேமா ஒன்றின்பின் மறைந்து நின்றான்.