சேக்சுபியர் கதைகள் - 4
219
இதற்குக் காரணம் அவர்கள் மக்களிடையில் அந்நாள் பரவிவந்த சீர்த்திருத்த இயக்கத்தின் குறிகளைக் கண்டு வெருட்சியடைந்ததேயாகும். ஐரோப்பாவில் இரண்டு நூற்றாண்டுகளுக்குப் பிறகு ஏற்படவிருந்த சீர்த்திருத்தப் புயலின் முன் அறிகுறிகள் தோன்றிய காலம் அது. மடத் தலைவர், துறவிகள், அந்தணர் ஆகிய நிலைகளில் பொதுமக்களும் பெருமக்களும் அளித்த பொருட்குவையின் வாயிலாக அந்நாளைய தலைமக்கள் அரசவாழ்வு வாழ்ந்து வந்தனர். பிறர் நெற்றி வியர்வை நிலத்தில் விழப் பாடுபட்ட பொருளை முயற்சியின்றிப் பட்டு மெத்தையிலும் பலவகை இன்பக் கலைகளிலும் செலவழித்து அவர்கள் பழகிப் போய் விட்டனர். புதிய சீர்த்திருத்தக்காரர் மக்கள் கண்களைத் திறந்து, அப்பொருளையெல்லாம் பொதுமக்கள் வாழ்வை உயர்த்தும் நெறிகளில் செலவிடும்படி தூண்டலாயினர். அத்தகைய தலைவர்களில் சிலர் பெரு மக்கள் பேரவையிலும் இடம் பெற்று, அரசன் செவிசாய்க்கும் அளவு கவர்ச்சியடைந்து விட்டனர் என்று கண்டனர் தலைமக்கள். போரார்வம், நாட்டுப்பற்று முதலிய இயற்கை வெறிகளாலன்றி இவ்வியக்கத்தை வேறு வழியில் திருப்ப முடியாது என்று அவர்கள் அறிந்தனர். அதனாலேதான் அரசனது போர்த் திட்டத்திற்கு அவர்கள் இத்தனை ஆதரவு கொடுக்க நேர்ந்தது.
ஹென்ரியின் முன்னோர்களாகிய மூன்றாம் எட்வர்டுப் பேரரசன் ஃபிரான்சுடன் போர் புரிவதற்காகத், தன் தாய் வழியில் அந்நாட்டின் அரசுரிமையைக் கோரினான். ஆனால் சலீக் சட்டம் என்ற ஓர் அரசியல் சட்டத்தின்படி ஃபிரெஞ்சு அரசுரிமை பெண்களுக்குச் செல்லாது. ஆகவே எட்வர்டின் அவ்வுரிமை வல்லடி வழக்காயிருந்ததேயன்றி வேறன்று. எட்வர்டின் உரிமையே இத்தகையது என்றால், ஹென்ரியின் உரிமையைப் பற்றிக் கூறவேண்டுவதில்லை. ஏனெனில், 'எட்வர்டின் நேர்வழியினனாகிய மார்ச்சுகோப் பெருமானை விலக்கியே ஹென்ரியின் குடியினர் இங்கிலாந்தின் அரசியலைக் கைப்பற்றியிருந்தனர். ஆனால் இவ்வையங்- களுக்கெல்லாம் தய்வத்தின் ஆட்பெயர்களாகவும் மக்கள் மனச்சான்றின் வெளியுருக்களாகவும் கருதப்பட்ட தலைமக்கள், மறைமொழி மேற்கோள் களுடனும் சட்ட விவரங்களுடனும் தக்க