பக்கம்:அப்பாத்துரையம் 38.pdf/277

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




(252

அப்பாத்துரையம் - 38

ஃபால்:என்னிடம் உனக்கு என்ன காரியம்?

புரூக்: எனக்குத் திருவாட்டி ஃபோர்டுமீது, அவள் சிறு பெண்ணாயிருக்கும் போதே காதல். என் தந்தை பிடிவாதத்தினால் நான் அவளை மணந்து கொள்ள முடியாமற் போயிற்று. ஆனால், எப்படியும் அவள் நட்பைப் பெறாது என் மனம் அமைதியுற இணங்கவில்லை. அதற்காக எவ்வளவு பணச்செலவு வந்தாலும் துன்பம் நேர்ந்தாலும் பட்டுக் கொள்வேன். அது வகையில் தாங்கள் உதவக்கூடும் என்றுதான் வந்தேன்.

ஃபால்: இஃதென்ன ஐயா! பொருத்தமற்ற பேச்சு; எனக்கும் இதற்கும் என்ன தொடர்பு இருக்கின்றது?

புரூக்: தொடர்பில்லாமல் நான் தங்களிடம் வருவேன் ஐயனே! பெண்டிர் எம்போலியர் பணத்தைப் பெற்றுச் செலவு செய்யக்கூடும். ஆனால், வேறு கவர்ச்சியில்லாத விடத்து அச்செல்வம் அவர்கள் ஒழுக்க வரம்பைக் கலையாது; தாமோ தமது பலவகைக் கவர்ச்சிகளால் அவ்வரம்பினைக் கடந்து செல்லும் ஆற்றல் உடையவர். ஆகவே, தம்மூலம் இதில் நான் வெற்றி கைவரப் பெறுவேன் என்று நம்புகிறேன்.

ஃபால்: இன்னும் நீர் சொல்வது எனக்கு விளங்க வில்லையே! நீர் சொல்லுகிற படியேதான் வைத்துக் கொண்டாலுங்கூட நான் வரம்பு கடப்பதால் உமக்கென்ன நன்மை?

புரூக்: நான் ஆய்ந்தோய்ந்து பாராமல் தங்களைத் தேடி வரவில்லை. ஐயனே! அவளது கற்பியல் வரம்பு கண்டு அஞ்சிய என்போன்றவர், தாங்கள் அதனைத் தகர்த்துச் சென்ற வழியைப் பிடித்து எளிதில் செல்லலாம் அல்லவா? ஆகவே, அஞ்சாது இப்பொருளை எடுத்துச் செலவு செய்து எனக்கு அப்பக்கம் வழி ஏற்படுமாறு செய்தருள்க.

3. படாதவரும் முகமனிற் படுவர்

முகமனில் யாரும் கரையாதிருக்க முடியாது. அதிலும் தாம் விரும்பும், ஆனால் தம்மிடமில்லாத பண்புகள் தம்மிடம் ருப்பனவாக வானளாவப் புகழ்ந்தால் அதில் மகிழாதவர் யார்! ஃபால்ஸ்டாஃப் அக்குழியில் விழுந்து அவனுக்குதவுவதாக உறுதி கொடுத்ததுடன் நில்லாது, பின்னும் நெருக்கமாக