சேக்சுபியர் கதைகள் - 4
261
அரசனாகும்படி அவன் எல்லாவகையான சூழ்ச்சிகளையும் வஞ்சச் செயல்களையும் செய்தான். முதலில் சிறைப்பட்டிருந்த பழைய அரசனாகிய ஆறாம் ஹென்ரியைக் கொன்றான்.
அவன் உ லை அடக்கம் செய்யச் செல்லும் வழியிலேயே அவன் இறந்துபோன மகன் மனைவியாகிய ஜேன் பெருமாட்டியை அச்சுறுத்தி வலிந்து மணஞ் செய்து தன் தீ முயற்சிகளுக்கான செலவுக்காக அவன் செல்வத்தைக் கவர்ந்தான். இம்மணத்திற்குத் தன் உடன் பிறந்தான் ஜார்ஜ் தடையாய் இருப்பானென்று கருதி, அவனுக்கும் மற்ற உடன் பிறந்தானாகிய மன்னன் எட்வர்டுக்குமிடையில் தீராப்பகையை மூட்டி ஜார்ஜைச் சிறையிடுவத்து மறைந்திருந்து தானே கொன்றான்.
பின் எட்வர்டு இறந்தபின் அரசியின் உறவினரை வெறுத்த பெருங்குடி மக்களைச் சேர்த்துக்கொண்டு முதலில் அவ்வுறவினரிடையே தலைவனான ரிவர்ஸ் கோமான் (அரசியின் அண்ணன்), டார்ஸ்ட் கோமான், ரிச்சர்டு கிரேப் பெருந்தகை (அரசியின் முதல் மணத்து மக்கள்) ஆகியவரைக் கொன்றொழித்தான். பின் அரசுரிமையை எதிர்த்த ஹேஸ்டிங்ஸ் வீழ்ச்சியடைந்தான்.
எட்வர்டின் பிள்ளைகளாகிய இளவரசர் இருவரும் சிறைப்பட்டு மணிக்கூண்டில் அவன் கூலிபெற்ற போக்கிரிகளால் கொல்லப்பட்டனர். இறுதியில் இதுகாறும் உடந்தையாயிருந்த பக்கிங்ஹாம் கோமகனுக்கு முன் உறுதியளித்த ஹெரிபோர்டு பெருநிலக்கிழமையைத் தாராது ஏமாற்றினான்.
பக்கிங்ஹாம் எளிதில் அவனிடமிருந்து தப்பித் தான் சிறைப்படுத்தி வைத்திருந்த அரசனுடைய பகைவரை விடுதலைசெய்து அரசன் குடிக்குப் போட்டியாய் அரசுரிமைக்கு வாதாடிய ஹென்ரி ரிச்மண்டு என்பவனுடன் ஃபிரான்சில் சென்று சேரும்படி அவர்களைத் தூண்டினான். இங்கிலாந்திலும் அவர்களுக்கு உதவ அவன் ஒரு கிளர்ச்சியை எழுப்பினான். ரிச்சர்டு கிளர்ச்சியை அடக்கப் பக்கிங்ஹாம் கோமகனைத் தூக்கிலிட்டான். பின் ஜேனைக் கொல்வித்து அவளை முன் வலியுறுத்தி மணந்தது போலவே தன் அண்ணன் மனவிையாகிய எலிசபெத் அரசியையும் அச்சுறுத்தி அவள் மகள் எலிசபெத் இளவரசியை மணக்க முயன்றான். ஆனால், இத்தடவை அவன்