பக்கம்:அப்பாத்துரையம் 38.pdf/290

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சேக்சுபியர் கதைகள் - 4

265

கொன்றேன். இன்னும் யார் யார் தடையாயிருப் பார்களோ அவர்களும் சாவது திண்ணம். ஆகவே, என்னை மணப்பதாக உறுதி கொடு. உன்னையும் இப்பிணத்தையும் போக விடுகிறேன்” என்றான். காலன் பிடியிலிருந்து விலகினும் இக்காலகண்டன் பிடியிலிருந்து விலகுவதற்கில்லை என்று கண்ட ஜேன் உள்ளத்தில் மட்டற்ற வெறுப்புடனும் எரிச்சலுடனும் “என்ன உறுதி வேண்டுமானாலும் தருகிறேன். என் கண்முன் நில்லாது தொலைந்து போ” என்றாள்.

ஜேனின் உள்ளத்தில் தன் தந்தையையும் தன் கணவனையும் இறுதியில் தன் மாமனையும் கொன்ற கொடியோனிடம் வெறுப்பு ஒருபுறம் இருந்தாலும், அச்சுறுத்தலும் துணிவும் முகமனுரையும் கலந்த அவன் நடிப்புக்குமுன் அவள் கோழைமை நாணி ஒடுங்கிப் பணிந்து, அதுகண்ட ரிச்சர்டு பின்னும் துணிவுடன் அவள் பெண்மை உணர்ச்சிகளை ஒறுப்பினால் தூண்ட முனைந்தான். “நான் செய்த கொடுமைகள் அத்தனையும் உன்னுடைய அக்கண்களின் கொடுமையினால்தான்; இன்னும் அக்கண்களின் கவர்ச்சியுட்பட்டு நான் மேலும் கொலைகள் நடத்தக்கூடும்.கொலையைத் தடுக்கக் கொலை செய்வது பழியன்று என்பர். ஆகவே, என்னை நேரிடையாகக் கொன்றழிக்க” என்று கூறிக்கொண்டு தன் வாளை உருவி அவள் காலடியில் வைத்து மண்டியிட்டு நின்று தன் மார்பை அவளுக்குக் காட்டினான். எவ்வளவு வெறுப்பிடையேயும் அம் மெல்லியலாள் தன்னைக் கொல்லும் துணிவுடையவள் அல்லள் என்ற அவன் உறுதிக்கேற்ப அவளும், “வேண்டா; எழுக” என்றாள். தன் காரியம் எளிதில் கைவடுவது கண்டு ரிச்சர்டு “எழமாட்டேன்; என்னைக் கொல்லத் தான் வேண்டும். உன் காதலின்றி நான் இருக்க விரும்பவில்லை. என் மீதிரங்கி என்னை மணப்பதாக உறுதி கூறினால் மட்டுமே நான் எழுவேன்” என்றான்.

66

உன்னை மணப்பதும் நான் சாவதும் ஒன்றுதான். வாழ்வுக்கு வகையற்ற நான் இனி எது செய்தால் என்ன? உன்னையோ உன்னினும் கடைப்பட்ட விலங்கையோ வேண்டுமானாலும் மணக்கிறேன். நீ இப்போது என்னை விட்டு அகலமாட்டாயா?” என்றாள் அவள்.கடைப்பட்டவரும் மதிக்கும் காதலினும் காரியமே பெரிதாகக் கொண்டு ரிச்சர்டு, தன் எளிய வெற்றியில் மனநிறைவு கொண்டு மகிழ்வுடன் தருக்கிச்