பக்கம்:அப்பாத்துரையம் 38.pdf/291

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




(266)

|– –

அப்பாத்துரையம் - 38

சென்றான். வேடன் விரும்பிய குயில் அவன் பையில் வந்து சேர்ந்தது. அப்பாடுங் குயில் இனிப் பாடுமோ பாடாதோ என்பதைப் பற்றி அவனுக்கென்ன கவலை? குயில் எல்லாருக்கும் செவிப்புலன் வழியே இன்பந் தருவது, அவனுக்கு அவ்வின்பம் நாப்புலன் வழித்தானே!

எட்வர்டு அரசன் தன் வீரத்தாலும் படைத்தலைமைத் திறத்தாலும் அரசியல் முறைகளாலும் பெற்ற அரசாட்சிச் செல்வத்தைச் சூழ்ச்சியால பெற ரிச்சர்டு மனக்கோட்டை கட்டியிருந்தான். அதன் அடிவாரக்கல் ஜேனேயாவாள். அவள் செல்வத்தினைப் பெற்றதே தன் மனக்கோட்டையில் பாதி கிட்டிவிட்டதாக ரிச்சர்டு எண்ணினான். அடுத்தபடியாக ஜேனின் தமக்கை கணவனாகிய தன் தம்பி கிளாரன்ஸ் கோமகன் இம்மணத்திற்குத் தடையாயிருக்கக்கூடுமாதலால், அவனை ஒழித்துவிட ஏற்பாடு செய்தான். பகையைப் பகையால் அழிப்பதே சிறந்த அரசியல் சூழ்ச்சி என்ற சாணக்கிய முறையை அவன் நன்கு அறிந்தவனாதலால், கிளாரன்ஸ் மீது எட்வர்டுக்கும் அவன் மனைவிக்கும் தீராப்பகைமை உண்டு பண்ணலானான்.

எட்வர்டின் திருமணக் காலத்திலேயே பல காரணங்களால் அவன் தாயாகிய யார்க்குக் கோமாட்டி அதனை விரும்பவில்லை. ஆகவே, எட்வர்டு இளமையில் மறைவாகச் செய்துகொண்டு ஒரு திருமணத்தின் சீட்டைக் காட்டி அங்ஙனம் ஒரு மனைவி இருக்கையில் அவனுக்கு இரண்டாவது மணம் செய்ய உரிமையில்லை என்று வாதாடி வந்தாள். எட்வர்டு வாயாடி மிக்க சமயத் தலைவர்களை ஏவி அதனைப் புறக்கணித்து விட்டாலும் மக்கள் மறைவில் அரசிக்கும் அவள் பிள்ளைகளுக்கும் அரசுரிமை கிடையாது என்று கூறிக் கொள்வதை மட்டும் அவனால் தடுக்க முடியவில்லை. இருப்புச் சலாகைகள் போன்ற தன் ஆட்சியின் பிடி நீங்கியபின், இவ்வெண்ணம் மக்களிடையே வேர்க் கொள்ளுமாயின், தன் பிள்ளைகளின் உரிமைக்கும் வாழ்வுக்கும் பேரிடர் நேருமென்று அரசன் அஞ்சினான். அத்துடன் அரசியும் அவள் உறவினரும் அஞ்சினர்.

கிளாரன்ஸ் அரசன் மணத்திற்கெதிராக

மக்கள்

எண்ணத்தைத் தூண்டி வருகிறான் என்று ரிச்சர்டு இப்போது அரசன் காதில் ஊதிவிடவே, அரசனும் அரசியும் ஆய்ந்தோய்ந்து