(274
அப்பாத்துரையம் - 38
கோயிலில் சார, மரீனாவை தயோனிஸா தன் புதல்வி பைலாட்டெனுக்குப் போட்டியெனப் பொறாமை கொண்டு அவளைக் கொல்விக்க முயன்றாள். ஆனால், தற்செயலாக அவள் கொள்ளைக்காரர் கைப்பட்டு மைட்டிலீனில் தீயவிடுதி ஒன்றில் சேர்ந்து அதனைத் திருத்தித் தானம் நல்வழி நின்றாள். அவளிறந்ததாகக் கேட்டுத் துயருருவில் சுற்றித் திரிந்த பெரிக்ளிஸுடன் அவள் கலந்து இணைந்தபின் அனைவரும் தயானாவின் கனாக் காட்சியால் எபீஸஸ் சென்று தயீஸாவையும் அடைந்தனர். மரீனாவை மைட்டிலீன் தலைவன் லிஸிமாக்கஸ் காதலித்து மணந்தான்.
1. தீவினையின் ஆர்ப்பாட்டம்
அன்டியோக்கஸ் என்ற ஒரு கொடுங்கோல் மன்னன் 2அன்டியோக் என்ற ஒரு நகரம் அமைத்து, அதில் குடிகள் மட்டுமின்றி அயல் மன்னரும் வெருவ அரசு புரிந்தான். அவன் தீச்செயல்களைத் துணிந்து செய்து உலகம் அவற்றை அறியாவண்ணம் வெளிப்பூச்சுப் பூசி ஏமாற்றி வந்தான். இதில் தான் அடைந்த வெற்றியால் தருக்க மேன்மேலும் அவன் உலக மக்களை ஏய்க்கவும் துன்புறுத்தவும் தொடங்கினான்.
பிறரறியாமல் மறைந்திருந்த அவன் தீச்செயல்களில் அவன் அழகிய புதல்வியும் அவனுக்கு உடந்தையாக இருந்தாள். ஆகவே,
யற்கைக்கு மாறாக அவளை யாருக்கும் மணம் செய்து கொடுக்காமல் தன்னிடமே வைத்துக் கொள்ள அவன் விரும்பினான். ஆயினும் மெய்ப்புக்கு அவளை மணக்க வேண்டுமென்று விரும்புபவர் தன் புதிர் ஒன்றுக்கு விடை தரவேண்டு மென்றும், விடை தராவிடில் தலையிழக்க இணங்கவேண்டு மென்றும் அவன் பறைசாற்று வித்தான். அப்புதிரில் யாரும் அறியாத அவன் தீச்செயலே குறிப்பாகக் காட்டப்பட்டிருந்தது. அதனையுணராது அரசிளஞ் செல்வர் பலர் அவன் பொறியில் வீழ்ந்து வீணே தம் விலைமதித்தற்குரிய உயிர்களை இழந்தனர்.
என்ற
ஆயினும்3டையர் நகரத்தின் புதிய அரசனான பெரிக்ளிஸ் ளைஞன், யாரும் அறியமுடியாது என்று அன்டியோக்கஸ் நினைத்துத் தருக்கியிருந்த மறைபொருளைப் புதிர் வாயிலாக உய்த்துணர்ந்து கொண்டான். புதிரை