பக்கம்:அப்பாத்துரையம் 38.pdf/302

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சேக்சுபியர் கதைகள் - 4

277

அவ்வாணை பெற்று டையரை அடைந்து அங்கே பெரிக்ளிஸ் காணாமற் போய்விட்டான் என்ற செய்தியைக் கேட்டு ஏமாற்றமடைந்தான். பின், 'எப்படியும் இந்த உலகில்தானே ருப்பான் அவன்! தேடிக் கண்டு பிடிக்காவிட்டால் நாமும் மறைந்ததொழிய வேண்டியதுதானே! ஆகவே, நாமும் நாடுசூழ் வருவோம்” எனப் புறப்பட்டான்.

தைலார்டு வந்த செய்தியையும் பிற விவரங்களையும் மெய்யன்பனாகிய ஹெலிக்கானஸ் அவ்வப்போது தார்ஸஸுக்கு ஆளனுப்பிப் பெரிக்ளிஸுக்குத் தெரிவித்து வந்தான். ஆனால், சிறிது காலத்திற்குள் பெரிக்ளிஸின் புகழ் எங்கும் பரவி அவன் தார்ஸஸிலிருக்கும் விவரம் எல்லோருக்கும் தெரியலாயிற்று. தைலார்டுக்கோ அன்டியோக்கஸின் பிற ஒற்றர்களுக்கோ இது தெரிந்துவிடுமுன் பெரிக்ளிஸ் மீண்டும் மறைந்து திரியவேண்டுமென்று அவன் பெரிக்ளிஸுக்கு விரைவில் ஓலை போக்கினான். அது பெற்ற பெரிக்ளிஸ் தன் புதிய நேசனான கிளியோனிடமும் அவன் மனைவியிடமும் பிரியா விடைபெற்று மீண்டும் உருமாறித் திரியலானான்.

3. புயலும் அமைதியும்

ஊழால் அலைக்கழிக்கப்படும் உயிரை அறிஞர் கடலில் அலைக்கழியும் துரும்புக்கு ஒப்பிடுவர். ஆனால் உவமை முகத்தாலன்றி உண்மையிலேயே பெரிக்ளிஸ் வாழ்வில் கடலலைகளின் போக்கே ஊழின் போக்காயிருந்தது. தார்ஸஸிலிருந்து பலநாள் பயணத்திற்கப்பால் நாவாய் செல்லுகையில் கடலேழும் புயலேழும் ஒரே புயலாக ஓர் உருப்பெற்றெழுந்ததென்னப் பெரும் புயலொன்று எழுந்து, நாவாயைப் பல வகையிலும் வாரியடித்து வீசி இறுதியில் அதனை ஒரு திடலில் மோதி நொறுக்கிற்று. பெரும்பாலோர் நாவாயின் பகுதிகளிடையே கிடந்து தாமும் நொறுக்குண்டு நைந்து மாண்டனர். பெரிக்ளிஸும் ஒரு சிலரும் சிறிதுநேரம் மிதக்கும் துண்டுகளைப் பற்றி மிதந்தனர். அவர்களுள் எத்துணைப் பேர் இவ்வுலகு கடந்து மேலுலகுக்கு நீந்திச் சென்றனர் என்று கூறமுடியாது. பெரிக்ளிஸும் அவர்கள் வழியே சென்றிருக்கக்கூடும். அவன் நல்லூழின் பயனாக மீன்படவர் சிலர் அவ்வழியே வந்து அவனைத் தம்முடன் தம் சிறு