302
அப்பாத்துரையம் - 38
'பாதுவா நகரில் 2பப்டிஸ்டா என்றொரு செல்வன் இருந்தான். அவன் புதல்வியர் இருவருள் மூத்தவள் ஆகிய 3 காதரீன் ஓர் அடங்காப் பிடாரி. அவள் பிடிமுரண்டும் குறும்பும் மிக்கவளாய்ச் சிறியவர், பெரியவர், ஆடவர், பெண்டிர் ஆகிய எல்லாரிடமும் தாறுமாறாக நடந்தும் பேசியும் வந்தாள். ஆனால், அவள் தங்கை 4பயாங்காவோ இன்முகமும் நயத்தக்க நாகரிகமும் உடையவள். அவளை மணக்க விரும்பித் தொலைவிடங்களி- லிருந்தும் பல செல்வ இளைஞர்கள் அவள் தந்தையிடம் வந்து வந்து போயினர்.ஆனால், யாரும் மூத்தவளை மணக்க முன்வரவில்லை. மூத்தாள் மணம் செய்யாமல் இளையாளை மணத்திற் கொடுப்பதில்லை என்று பப்டிஸ்டா, ளையாளை விரும்பி வந்தவர்களுக்கெல்லாம் சொல்லிக் கொண்டிருந்தான். இதன் காரணமாகப் பப்டிஸ்டாவின் இரு புதல்வியருக்குமே என்றும் மணம் நிகழாதிருந்த விடுமோ என்று பலர் கூறலாயினர்.
உளிக்கேற்ற சுத்தியலில்லாமலிருக்காது என்றபடி இத்தகைய பெண்ணையும் மணக்க விரும்பிய ஒருவன் நாளடைவில் ஏற்பட்டான் அவனே 5பெட்ரூக்கியோ என்பவன். அவன் ஆழ்ந்தகன்ற அறிவுடன் சமயத்துக்கேற்ற நடிப்பும் துணிவும், நாத்திறமும் உடையவன். முள் நிறைந்து முதிர்ந்த கள்ளியை அப்புறப்படுத்தினால் அதனடியில் அகில் அகப்படும் என்று கூறப்படுவதை அவன் அறிவான். அதுபோலவே நல்வழியில் செல்லாது தீங்குக்காளான காதரீன் புறம்போர்த்த முரண்பாட்டை நீக்கினால் அவள் ஒப்பற்ற திறம் அவள் பெண்மைக்குப் பொலிவுதரும் என அவன் கண்டு எப்படியும் அவளை அடைந்து திருத்துவது என்று முனைந்தான்.
வ்வகையில் பெட்ரூக்கியோவின் திட்டம் மிகவும் புதுமையானது. அரம்போன்ற இயல்புடைய அவள் முரண்பாட்டை அதனினும் முரண் பாடுடைய கின்னரத்தால் அவன் தீட்டிச் செப்பனிட முயன்றான். பப்டிஸ்டாவினிடம் அவன் சென்று, "உம் புதல்வியின் ஒப்பற்ற அழகையும் அவ்வழகினும் மேம்பட்ட உயர் குணங்களையும் கேள்விப்பட்டு அவளை மணக்க வந்தேன்," என்றான்.
அச்சொற்களைக் கேட்ட அரசன் அவ்வுரை தன் இளைய