4
சேக்சுபியர் கதைகள் - 4
(305
பெட்ரூக்கியோ, 'காதரீன் என் உடையைக் காதலித்து மணக்கவில்லையே; என்னைத்தானே காதலித்து மணக்க இணங்கி வந்திருக்கிறாள்' என்று கூறினான். காதரீனுக்கு அவமதிப்பால் உடல் எண்சாணும் ஒரு சாணாகக் குறுகிற்று. சீற்றத்தால் உடலெல்லாம் படபடத்தது. ஆனால், முதல் தடவையாக அவள் சீற்றத்தை இன்று காட்ட முடியவில்லை. அவள் தோல்வி தொடங்கிற்று.
மணவினையின் போது பெட்ரூக்கியோ தன் வேலையாட் களிடத்தும் தன்னை வாழ்த்த வந்தவர்களிடத்தும் கடுஞ்சினங் கொண்டு சீறிவிழுந்தான். சமயத்தலைவர் வழக்கப்படி மெள்ள, 'இந் நங்கையை நீ ஏற்றுக்கொள்கிறேன் என்று ஆணையிடு வாயா?' என்ற போது அவன் இடியேறென முழங்கி ஆரவாரித்துக் கொண்டு, 'ஆம். நான் ஏற்றுக் கெள்ளுகிறேன். இதெல்லாம் என்ன கேள்வி?' என்று அதட்டினான். எதிர்பாரா அந்நடத்தை கண்டு திகில்கொண்டு சமயத்தலைவர் கையிலிருந்த சமயநூலைத் தடாலென்று கீழே போட்டுவிட்டார். சமய வினைக்குப்பின் விடாய்தீர நறுநீர்கேட்க, மாப்பிள்ளைத் தோழன் நீர் கொணர்ந்தான். அதை உரக்கச் சிரித்துக் கொண்டே குடித்த பின் பெட்ரூக்கியோ கொணர்ந்தவன்மீதே மீந்த எச்சில் நீரைக் கொட்டினான். இதையெல்லாம் கண்டவர்கள் இதுவரைக் ாதரீனைக் கட்டியதற்காகப் பெட்ரூக்கியோவிடம் இரக்கம் காட்டியது போக, பெட்ரூக்கியோவைக் கட்டியதற்காகக் காத்ரீனிடமே இரக்கங்காட்டத் தொடங்கினர்.
மணவினை முடிந்தபின் பெரிய விருந்துக்கு ஏற்பாடாகி யிருந்தது.ஆனால், பெட்ரூக்கியோ அது முடிந்தபின் முன்போலவே பித்துக்கொண்டவன் போல் நடித்துப் பப்டிஸ்டாவிடம் சென்று,
66
என் மனைவியை நான் அழைத்துக் கொண்டு போகிறேன். என்னை எவர் தடை செய்ய முடியும்?” என்றான். நயமொழிகள் கூறக்கூட அஞ்சி அனைவரும் ‘தடையில்லை; நீங்கள் போகலாம்." என்றனர். ‘ அனைவரும் இங்ஙனம் அஞ்சி நடுங்கிப் பின்னிடச் செய்யும் இவ்விலங்குடன் இனி எப்படி வாழ்வது?' என்று காத்ரீனுள்ளத்தில் சற்றுக் கவலை தோன்றிற்று.
புக்ககத்திற்குச் செல்லப் பெட்ரூக்கியோ ஏற்பாடு செய்திருந்த வண்டிகட்டை வண்டியிலும் கடைப்பட்ட தென்னல்