பக்கம்:அப்பாத்துரையம் 38.pdf/346

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சேக்சுபியர் கதைகள் - 4

321

சென்று கண்டு உண்மையறியும் ஆர்வம் ஒருபுறம் அவனைப் பிடித்து வாட்டின.

அன்றிரவு நெடுநேரம்வரை விருந்தயர்ந்தபின் ஹெக்டாரும் திராய் வீரரும் விடைகொண்டு தம் நகர்க்கோட்டையை நாடிச் சென்றனர். அவர்களை வழியனுப்பச் சென்றவர்களுள் தயோமிடிஸும் ஒருவன். திராய் வீரர் அப்பால் அகன்றபின் அவன் பிறருடன் திரும்பாமல் ஒருபுறமாக ஒதுங்கிப் பதுங்கி நின்று பின் தனியாயிருப்பதாக எண்ணிச் சீழ்க்கையடித்துத் தாழ்ந்த குரலில் பாடியவனாய்க் கால்சஸ் குடிசைப் பக்கம் திரும்பனிான். அவனைப் பின்பற்றி ஒளிந்து கொண்டே திராய்லஸும் யுலிஸிஸும் சென்றனர்.

தயோமிடிஸ் கால்சஸைக் கண்டு, “உம் புதல்வி எங்கே?” என்று உரிமையுடன் வினவியதையும், அவன், "அவள் உன்னையே எதிர்பார்த்துத் தன் அறையின் பலகணியில் காத்திருக்கிறாள்,” என்று கூறியதையும், தன்னிடம் உறுதி கூறிய கிரெஸிடா அவ்விளைஞனுடன் கூசாது நள்ளிரவில் பேசிப் பிணங்கி யதையும் கண்டு திராய்லஸ் அங்கமுற்றும் வெம்பிக் கொதித்தான். யுலிஸிஸின் பொறுப்பை உன்ன அருமுயற்சியுடன் தன்னை யடக்கிக் கொண்டு கனவிலும் காண எண்ணியிராத காட்சிகளை அவன் கண்டான். தயோமிடிஸ் ஏதோ ஒன்றை அவளிடம் வற்புறுத்திக் கேட்பதையும், அவள் அதனைக் கொடுக்க மறுத்தும் அவன் பிணங்கி வெளிச் செல்வதாகக் கூறவே, அவள் அவனை நாடியைத் தாங்கி அழைத்து வந்து தருவதாகக் கூறுவதையும் பலதடவை இவ்வண்ணம் அகச்சான்றுடன் போராடிக் காதலன் வயப்பட்டு இறுதியில் அதனை அவள் கொடுத்ததையும் திராய்லஸ் கண்டான். அங்ஙனம் உள்ளத்தி னின்று பறித்தெடுத்துக் கொடுப்பதுபோல் அவள் கொடுத்தது தன் காதல் நினைவூட்டாகிய கையுறையே யென்றறிந்ததும் அவன் பித்துக்

வேறு

காண்டவன் போலானான். செய்வகையறியாமல் யுலிஸினிடம் "என் உயிரைக் கவர்ந்த க்கயவனை நாளையே போரில் வீழ்த்துகிறேன்" என்று சூளுரைத்து அகன்றான்.

திராய்லஸின் இக்காதல் நாடகம் முடிவுற்று. அவன் திராய்க்கு மீளுமுன் போர்நிறுத்தக் காலம் முடிவுற்றது. ஹெக்டர்