பக்கம்:அப்பாத்துரையம் 38.pdf/359

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




334

||-

அப்பாத்துரையம் - 38

கடமைப் பட்டவளே. பேரரசரும் என் வணக்கத்திற்குரியவர். ஆனால், என் இதயம் முன்பே பஸ்ஸியானஸின் உடைமையாகப் போய்விட்டது. தங்கள் விருப்பப்படி நடக்க இயலாமைக்கு மன்னிக்கக் கோருகிறேன்,” என்றாள்.

அச்சமயம்

பஸ்ஸியானஸும் முன்வந்து அவள் கையைப்பற்றி, “இது வரை என் மனமொத்த துணையாய் இருந்தாய்;த இனிமனமொத்த துணைவியாகக் கொள்வேன்," என்று கூறி அவளை அழைத்து அப்பாற் சென்றான். காவலர் தடுக்கப்புகும் அளவில், டைட்டஸின் புதல்வர்கள் வாளையுருவி அவ்விருவரையும் காவல் செய்து அவர்கள் வெளிச்செல்ல உதவினர். மைந்தர்களுள் அனைவரிலும் இளையவனான 2மியூட்டியஸ் அவர்கள் வெளிச் செல்லும் வாயிலில் வழிமறித்து நின்றான். அவர்களை எதிர்த்துத் தன் புதிய அரசுரிமைக்கு இழுக்கு வருவிக்க வேண்டாமென எண்ணி ஸாட்டரினினஸ் டமோரா பக்கம் திரும்பி, வா, நாம்போவோம்" என்று கூறி வேறு வாயில் வழியாக அவளை உடன் அழைத்துக் கொண்டு சென்றான்.

66

தோல்வி மனப்பான்மையும் ஏமாற்றமும் நிறைந்த ஸாட்டர்னினஸ் பக்கமாக டமோரா கடைக்கண்ணோக்கம் செய்து, “தம் காதலைப் பெறத் தவம் கிடக்க வேண்டும். அவளுக்கு அது கொடுத்து வைக்கவில்லை!” என்றாள்.

அவள் குறிப்பிற்கிசைய அரசன் மனம் அவள் பால் எளிதில் வளைந்தது. விரைவில் அரசன் உள்ளத்தையும் அவனைச் சார்ந்த உள்ளங்களையும் கவர்ச்சி செய்து டமோரா ரோமப் பேரரசியாயமர்ந்தாள்.

அரசன் இவ்வாறிருப்ப, டைட்டஸ் தன்னையும் தன் மன்னனையும் அவமதித்து எதிர்த்த தன் மகள் மீதும், அவள் காதலன்மீதும், தன் மைந்தர்கள் மீதும் பொங்கியெழும் சினத்துடன் அவர்களைப் பின் தொடரும் எண்ணங் கொண்டு வாளுடன் புறப்பட்டான். அவனுடைய கடைசிக் கான்முளையாகிய மியூட்டியஸ், "ஐய! தந்தையாயினும் இப்போது என் தமக்கை உரிமையைக் காத்து நிற்கும் என்னைக் கடந்து செல்ல முடியாது," என்றான்.

""